Published:Updated:

`ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை!' - மோடியின் பிறந்தநாளன்று ஏலத்தில் விடப்படும் நினைவுப் பரிசுகள்

கண்காட்சி ( ட்விட்டர் )

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளின் சிறப்பு கண்காட்சி டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் நடந்துவருகிறது.

`ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை!' - மோடியின் பிறந்தநாளன்று ஏலத்தில் விடப்படும் நினைவுப் பரிசுகள்

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளின் சிறப்பு கண்காட்சி டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் நடந்துவருகிறது.

Published:Updated:
கண்காட்சி ( ட்விட்டர் )

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவருக்கு வந்த பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட இருக்கின்றன. 2019-ல் பிரதமர் அலுவலகத்தால் பரிசு பொருள்களின் ஆன்லைன் ஏலம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே மூன்று முறை இது போன்று ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்திருக்கும் நிலையில், நான்காவது முறையாக வருகின்ற செப்டம்பர் 17-ம் தேதி ஏழாம் தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

பரிசு பொருள்
பரிசு பொருள்
ட்விட்டர்

பிரதமர் மோடிக்கு புகழ்பெற்ற நபர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் விலை உயர்ந்த நினைவுச் சின்னங்கள் இந்த ஏலத்தில் இடம் பெறும். இந்தமுறை கூடுதலாக விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் மற்றும் இந்தியாவின் மிகவும் பிரபலமான சில விளையாட்டு வீரர்களால் ஆட்டோகிராஃப் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஜெர்சிகள், பேட்மிட்டன் ராக்கெட்டுகள் மற்றும் பல விலை உயர்ந்த பொருள்களும் ஏலத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஏலப் பொருள்
ஏலப் பொருள்
ட்விட்டர்

ஏலத்தை முன்னிட்டு பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளின் சிறப்பு கண்காட்சி டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் நடந்துவருகிறது. பரிசுப் பொருள்கள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து பொருள்களும் செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஆன்லைனில் ஏலம் விடப்படும். பரிசு பொருள்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு பொருள்
பரிசு பொருள்
ட்விட்டர்

கடந்த காலத்தைப் போலவே ஏலத்தின் வாயிலாக கிடைக்கும் தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்புமிக்க பரிசுப் பொருள்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.