Published:Updated:

ஓணம் பண்டிகை கொண்டாட கேரளாவுக்குச் சென்றவர் வீட்டில் கைவரிசை! - கொள்ளையர்களைத் தேடும் போலீஸ்

வீட்டில் கொள்ளை

கேரளாவுக்கு ஓணம் பண்டிகை கொண்டாடச் சென்ற ஓ.என்.ஜி.சி அதிகாரியின் வீட்டுக் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.30,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஓணம் பண்டிகை கொண்டாட கேரளாவுக்குச் சென்றவர் வீட்டில் கைவரிசை! - கொள்ளையர்களைத் தேடும் போலீஸ்

கேரளாவுக்கு ஓணம் பண்டிகை கொண்டாடச் சென்ற ஓ.என்.ஜி.சி அதிகாரியின் வீட்டுக் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.30,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
வீட்டில் கொள்ளை

காரைக்காலிலிருந்து கேரளாவுக்கு ஓணம் பண்டிகை கொண்டாடச் சென்ற ஓ.என்.ஜி.சி அதிகாரியின் வீட்டுக் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.30,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

வீட்டில் திருட்டு
வீட்டில் திருட்டு

காரைக்கால் ரயில் நிலையம் அருகே பாரதி நகரில் வசிப்பவர்  ஷடானனன் (வயது 59). இவர் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பொதுமேலாளராக வேலை பார்த்துவருகிறார். இவருடன் மனைவி பேபி, மகள் அனுமோல், பேத்தி அத்விதி ஆகியோரும் வசிக்கின்றனர்.

கடந்த 3-ம் தேதி கேரளாவுக்கு ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் கேரளாவுக்குச் சென்றிருக்கின்றனர். பண்டிகை முடிந்து நேற்று காரைக்கால் திரும்பினா். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். மேலும், வீட்டினுள் 2.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.30,000 ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. முன்பக்கக் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், கேமரா காட்சிப் பதிவுகள்கொண்ட DVR மற்றும் UPS-ஐயும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டனர். மேலும், இதே வீட்டில் ஷடானனன் குடும்பத்தினர் குறிப்பிட்ட சில நகைகளை வேறு இடத்தில் பாதுகாத்து வைத்திருந்ததால் அந்த நகைகள் கொள்ளையர்களிடமிருந்து தப்பியதும் தெரியவந்திருக்கிறது.  

வீட்டில் திருட்டு
வீட்டில் திருட்டு

இது குறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஷடானனன் புகார் செய்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த நகர காவல் நிலைய ஆய்வாளர் மேரி கிரிஸ்டியன்பால் மற்றும் போலீஸார் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.