Published:Updated:

கங்கை ஆற்றில் உல்லாசப் பயணம்: புகைபிடித்தபடியே படகில் சிக்கன் சமைத்தவர்களுக்கு வலைவீச்சு!

கங்கையாற்றில் சிக்கன் சமையல்

கங்கை ஆற்றில் படகில் புகைபிடித்தபடி சிக்கன் சமைத்த நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

கங்கை ஆற்றில் உல்லாசப் பயணம்: புகைபிடித்தபடியே படகில் சிக்கன் சமைத்தவர்களுக்கு வலைவீச்சு!

கங்கை ஆற்றில் படகில் புகைபிடித்தபடி சிக்கன் சமைத்த நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
கங்கையாற்றில் சிக்கன் சமையல்

புனிதநதியாகக் கருதப்படும் கங்கை நாளுக்கு நாள் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. இதில் நீராடுவதற்காக தினமும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதேசமயம் கங்கை ஆற்றில் இறந்தவர்களை தூக்கிப்போடும் சம்பவங்களும் நடக்கின்றன. உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாக்ராஜ் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் சிலர் படகில் பயணம் செய்துகொண்டே சிக்கன் சமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. சிக்கன் சமைப்பவர்கள் ஹூக்கா எனப்படும் பைப் மூலம் புகைபிடித்துக்கொண்டிருந்தனர். பிரயாக்ராஜ் அருகிலுள்ள தாராகஞ்ச் என்ற இடத்தில் இருக்கும் நாகவாசுகி கோயில் அருகில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. புனிதநதியாகக் கருதப்படும் கங்கையில் கோழிக்கறியைச் சமைத்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, அந்த வீடியோவில் இருக்கும் நபர்களைக் கைதுசெய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடியோ
வீடியோ

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி சைலேஷ் குமார் இது குறித்துக் கூறுகையில், ``கங்கை ஆற்றில் படகில் கோழிக்கறி சமைத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். கடந்த வாரத்தில் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன. கனமழை காரணமாக ராஜாபூர், தாராகஞ்ச் உட்பட பல நகரங்கள் மழைநீரால் சூழ்ந்தன. மழைநீரில் படகுச் சவாரி செய்ய நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது. கங்கை ஆறு பயணிக்கும் இடங்கள் அனைத்திலும் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் மற்றும் கங்கை ஆற்றுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.