Published:Updated:

வாளைக் காட்டி மிரட்டிய பெண் சாமியார்.. கொரோனாவின் சமூகப்பரவலைத் தடுக்க, புத்தி புகட்டிய போலீஸ்!

கொரோனாவால் அடி வாங்கிய பெண் சாமியார்
கொரோனாவால் அடி வாங்கிய பெண் சாமியார்

சாமியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் தர்ம அடி. கொரோனாவைத் தடுக்க போலீஸ் அதிரடி.

கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மத விழாக்கள், திருவிழாக்கள், அரசியல் கூட்டங்களுக்கும் தடை உள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தியோரா மாவட்டத்தில், மா ஆதி சக்தி என்ற பெண் சாமியார் மத போதனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

கொரோனா
கொரோனா

கூட்டத்தை அவரின் வீட்டிலேயே, பெண் சாமியார் நடத்தினார். வீட்டுக்குள் 100 பேர் வரை கூடியிருந்தனர். போலீஸார், 'கூட்டத்தை நடத்தக் கூடாது' என்று கூறிய பின்னரும் அந்தப் பெண் சாமியார் கேட்கவில்லை. 'என்னைத் தடுத்துப் பார்' என்று கையில் வாளை எடுத்து, போலீஸாருக்கு சவால் விடுத்துக்கொண்டிருந்தார்.

போலீஸார், 'தயவு செய்து கூட்டத்தைக் கலைத்து விடுங்கள்' என்று எச்சரித்தும் பலனில்லை. அந்தப் பெண் சாமியார் கேட்கும் நிலையிலும் இல்லை. தொடர்ந்து, போலீஸாருக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத போலீஸார் பெண் சாமியாரை வெளுத்து வாங்கினர். அவரின் ஆதரவாளர்களையும் அடித்துத் துவைத்தனர். பின்னர், பெண் சாமியாரை தர தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

போலீஸாரின் அதிரடியைத் தொடர்ந்து, பெண் சாமியாரின் ஆதரவாளர்களும் தலை தெறிக்க ஓடி விட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், பீகாரிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

`உணவையும் உதவியையும் உடனடியாகக் கொண்டு சேர்க்கலாம்!’ - ப.சிதம்பரத்தின் 10 அம்சத் திட்டம்

தற்போது, அந்தப் பகுதியில் அமைதி நிலவுகிறது. போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸைத் தடுக்க உத்தரப்பிரதேச போலீஸார் எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு