Published:Updated:

மகாராஷ்டிரா: பா.ஜ.க பிரமுகரை தாக்கிய போலீஸார்; பரபரப்பை கிளப்பிய வீடியோ! - விசாரணைக்கு உத்தரவு

தாக்கும் போலீஸார்
தாக்கும் போலீஸார்

மகாராஷ்டிராவில் பாஜக பிரமுகர் ஒருவரை போலீஸார் கண்முடித்தனமாக தாக்கிய வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் பாஜக இளைஞரணி செயலாளராக இருக்கும் சிவ்ராஜ் நாசியல்வாலா என்பவரை 5 போலீஸார் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து. இது இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. விசாரணையில் இச்சம்பவம் ஜல்னா மருத்துவமனையில் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது என்று தெரிய வந்தது. இது குறித்து ஜல்னா எஸ்.பி. விநாயக் தேஷ்முக் கூறுகையில், ``பாஜக பிரமுகர் சிவ்ராஜ் என்பவரை போலீஸார் தாக்கிய சம்பவம் ஏப்ரல் 9-ம் தேதி நடந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸார் தாக்கும் காட்சி
போலீஸார் தாக்கும் காட்சி

தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ஜல்னாவில் உள்ள தீபக் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததால் இளைஞர்கள் சிலர் சேர்ந்து டாக்டரை அடித்து உதைத்து அவசர சிகிச்சை பிரிவை சேதப்படுத்தினர். மருத்துவமனை கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் கண்டதும் தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால் நாரியல்வாலா மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை போலீஸார் லத்தியால் அடித்து வெளியேற்றினர்” என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து ஜல்னா கூடுதல் எஸ்.பி.பிரசன்னா கூறுகையில், ``சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பாஜக பிரமுகரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக முன்னாள் அமைச்சர் பாபன்ராவ் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு