Published:Updated:

ஒடிசா: ``யாரும் என்னிடம் சொல்லவில்லை!" - தன் திருமணத்துக்கே செல்லாத எம்எல்ஏ-மீது வழக்கு

திருமணம் ( சித்திரிப்புப் படம் )

சொந்த திருமண பதிவுக்கு செல்லாத ஒடிசா எம்.எல்.ஏ-மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒடிசா: ``யாரும் என்னிடம் சொல்லவில்லை!" - தன் திருமணத்துக்கே செல்லாத எம்எல்ஏ-மீது வழக்கு

சொந்த திருமண பதிவுக்கு செல்லாத ஒடிசா எம்.எல்.ஏ-மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Published:Updated:
திருமணம் ( சித்திரிப்புப் படம் )

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பிஜய் சங்கர் தாஸ்(30). இவர் பெண் ஒருவருடன் நட்பில் இருந்தார். அந்தப் பெண்ணும், பிஜய் சங்கரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். அவர்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். இதற்காக இருவரும் சேர்ந்து திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். 30 நாள்கள் கழித்து திருமணத்தை பதிவுசெய்யவேண்டும் என்பது விதிமுறை. அதன்படி 30 நாள்கள் முடிந்து, திருமணத்தை பதிவு செய்யும் நாளும் குறிக்கப்பட்டுவிட்ட நிலையில் பெண் வீட்டார் அனைவரும் திருமணத்தை பதிவு செய்யும் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். ஆனால், சொன்னபடி பிஜய் சங்கர் திருமணத்துக்கு வரவில்லை. போனை எடுத்து பேசவும் இல்லை. நீண்ட நேரம் காத்திருந்த பெண் வீட்டார் வேறு வழியின்றி வீட்டுக்குச் சென்றனர். அதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பிஜய் சங்கர்மீது போலீஸில் புகார் செய்தார். தன்னை பிஜய் சிங்கர் ஏமாற்றிவிட்டதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.

பிஜய் சங்கர்
பிஜய் சங்கர்

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண்,``3 ஆண்டுகளாக பிஜய் சங்கருடன் தொடர்பில் இருக்கிறேன். என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரின் சகோதரரும், அவர் குடும்பத்தினரும் என்னை மிரட்டினர். பிஜய் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றவில்லை. எனது போன் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

இது குறித்து பிஜய் சங்கர்,``திருமணத்தை பதிவு செய்ய மேலும் 60 நாள்கள் அவகாசம் இருக்கிறது. அதனால்தான் போகவில்லை. அதோடு பதிவு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்று அந்தப் பெண்ணோ அல்லது வேறு யாரும் என்னிடம் சொல்லவில்லை. அதனால்தான் போகவில்லை" என்று விளக்கமளித்திருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism