Published:Updated:

`நிர்வாணப்படுத்தி அடித்தனர்; கர்ப்பம் கலைந்துவிட்டது!’ - அஸ்ஸாமில் 3 சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை

அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று பெண்களைக் காவல்நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் காவல் அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Harassment
Harassment

அஸ்ஸாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த செப்டம்பர் 8-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். காவலர்களின் துன்புறுத்தலால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிட்டது. சம்பவம் நடந்து 10 நாள்கள் ஆன நிலையில் தற்போதுதான் இந்தச் சம்பவம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Prison
Prison

காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துப் பேசிய மூன்று பெண்களில் ஒருவர், ``செப்டம்பர் 8-ம் தேதி இரவு எங்கள் வீட்டிலிருந்தோம். அங்கு வந்த காவலர்கள் எங்களைக் காவல்நிலையத்துக்கு வரும்படி கூறினர். நாங்கள் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்கு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டியதும் நானும் என் கணவரும் பயந்துவிட்டோம். அவர்கள் நம்மைச் சுடப் போகிறார்கள் என என் கணவர் கூறினார்.

`6 மணி நேரம் கெஞ்சினேன்; வேடிக்கை பார்த்தனர்’ - அமெரிக்கச் சிறையில் கர்ப்பிணிக்கு நடந்த கொடுமை

ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் என்னுடன் சேர்த்து மூத்த மற்றும் இளைய சகோதரிகளையும் புர்ஹா புறநகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களைச் லாக்அப்பில் அடைத்து நிர்வாணப்படுத்தி லத்தியால் தாக்கினர். பின்னர் பூட்ஸ் கால்களாலும் உதைத்தனர். என் மூத்த சகோதரி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தார். காவலர்கள் அவளை வயிற்றிலேயே உதைத்தனர். இதனால் ரத்தம் வடிந்த நிலையில் அவள் சுருண்டு விழுந்துவிட்டாள்.

pregnant
pregnant

துப்பாக்கியைக் காட்டி, வெற்றுத்தாளில் கையெழுத்துப் போடும்படி எங்களை மிரட்டினர். இது மட்டுமல்லாமல் எங்கள் மூத்த சகோதரர் எங்கு உள்ளார் எனக் கூறும்படி விடிய விடிய அடித்துக்கொண்டே இருந்தனர். ஆனால், நாங்கள் அவர் இருக்கும் இடத்தைக் கூறவில்லை. என் மூத்த சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னரே நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

Vikatan

இந்தச் சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 10-ம் தேதி தர்ராங் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர் எங்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.

நேற்று அஸ்ஸாம் மாநில ஊடகங்களில் அந்தப் பெண் அளித்த பேட்டியால் இந்த விஷயம் தற்போது வெளியில் வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு டி.எஸ்.பி-க்கு உத்தரவிட்டிருக்கிறேன். காவலர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தரப்படும்.
மாவட்ட எஸ்.பி.

பெண்கள் அளித்த புகாரின் பேரில் புர்ஹா காவல்நிலையப் பெண் கான்ஸ்டபிள் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தர்ராங் மாவட்ட எஸ்.பி-க்கு அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

``பெண்கள் கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக செப்டம்பர் 11-ம் தேதிதான் எங்களுக்குப் புகார் வந்தது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு நான் டி.எஸ்.பி-க்கு உத்தரவிட்டுள்ளேன். காவலர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தரப்படும். மேலும், பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் மருத்துவ அறிக்கைகளும் கோரப்பட்டுள்ளன. அது வந்த பிறகு எங்கள் விசாரணை தீவிரப்படுத்தப்படும்” எனத் தர்ராங் மாவட்ட எஸ்.பி அம்ரிட் புயான் கூறியுள்ளார்.

Harassment
Harassment

மூன்று பெண்களும் எந்த வழக்கில் தொடர்புடையவர்கள், அவர்கள் என்ன குற்றம் செய்தனர் என்பன போன்ற எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.