ஜனவரி 23-ம் தேதிக்கு பதிலாக, வருகிற பிப்ரவரி 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் போலியோ வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறும். அந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாகப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அந்த வகையில் இந்த மாதம் ஜனவரி 23-ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 27-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், போலியோ சொட்டு மருந்து தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism