Published:Updated:

வன மேம்பாட்டுக்கு ரூ.2 கோடி நிதி... 1,650 ஏக்கர் வனப்பகுதியைத் தத்தெடுத்த நடிகர் பிரபாஸ்

பிரபாஸ்
பிரபாஸ்

ஆந்திராவில் வனமேம்பாட்டு பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகரான பிரபாஸ் `பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் பிரபலமடைந்தார். இவர் கடந்த சில வருடங்களாகப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். கொரோனா நிதியாகவும் ரூ.4 கோடி கொடுத்திருந்தார். மேலும், தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமாருடன் `கிரீன் இந்தியா சேலன்ஞ்’சின் அடுத்தகட்டத்தைச் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இவரைத்தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் செடிகளை நட்டனர்.

பிரபாஸ்
பிரபாஸ்

இந்நிலையில் நடிகர் பிரபாஸ், ஆந்திர மாநிலம் துண்டிகல் அருகில் சுமார் 1,650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஸிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டு பணிகளுக்காக 2 கோடி ரூபாயை வன அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். `பசுமை இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தை பெயர் சூட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஸ்பெஷல் நபருக்கான ஸ்பெஷல் படம்' - மோடியின் அடுத்த பயோபிக் அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ், எம்.பி சந்தோஷ்குமார், தெலங்கானா அமைச்சர் இந்திராகரன் ரெட்டி ஆகியோர் இணைந்து இதற்கான அடிக்கல்லை நேற்று முன்தினம் நட்டனர். பிறகு, காஸிபள்ளி வனப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்திலிருந்து வனத்தைப் பார்வையிட்டு, வனப்பகுதியில் மரக்கன்றுகளை வைத்தனர். தற்போது பிரபாஸ் தத்தெடுத்துள்ள இந்த வனப்பகுதி ஹைதராபாத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் ஹைதராபாத் ரிங் சாலையில் அமைந்துள்ளது.

பிரபாஸ்
பிரபாஸ்

காஸிபள்ளி ரிசர்வ் காடு அதன் மருத்துவ தாவரங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கிருக்கும் வனப்பகுதி முழுவதையும் வேலி அமைத்து உடனடியாக ஒரு சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்படவுள்ளது. மேலும் பூங்கா வாயில், நடைபாதை, வியூ பாய்ன்ட், மருத்துவ தாவர மையம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு