Published:Updated:

கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் தைத்துதரும் குடியரசு தலைவரின் மனைவி!

குடியரசு தலைவரின் மனைவி சவிதா
குடியரசு தலைவரின் மனைவி சவிதா

தன்னுடைய முகத்தில் சிவப்புற நிற மாஸ்க் அணிந்தவாறு மாஸ்க் தைக்கும் பணியைச் செய்து முடித்துள்ளார் .

கொரோனா தாக்கத்தில் தப்பிக்க, டெல்லி நகர்ப்புறத்தில் ஆதரவற்றோர் முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்காக மாஸ்க் தைத்துக் கொடுத்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மனைவி.

கொரோனா நோய் பாதிப்பு
கொரோனா நோய் பாதிப்பு

உலகம் ழுழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை இந்தியாவில் 21 ஆயிரத்து 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று தலைநகர் டெல்லியில் 2248 பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில், 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்த நோய் தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் மற்றும் உறைகளுக்கு நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தன்னார்வலர்கள் பலரும் மாஸ்க் மற்றும் உறைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், டெல்லியின் நகர்ப்புறத்தில் ஆதரவற்றோர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா கோவிந்த் மாஸ்க் தைத்துக் கொடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை எஸ்டேட் பகுதியில் உள்ள சக்தியஹாட் என்ற தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று தன்னுடைய முகத்தில் சிவப்புற நிற மாஸ்க் அணிந்தவாறு மாஸ்க் தைக்கும் பணியைச் செய்து முடித்துள்ளார்.

மாஸ்க் அணிந்து கம்பி வழியாகப் பார்க்கும் பெண் குழந்தை
மாஸ்க் அணிந்து கம்பி வழியாகப் பார்க்கும் பெண் குழந்தை

அவர் தைத்துள்ள இந்த மாஸ்குகள் டெல்லி நகர்ப்புறக் குடிசை வாழ் மேம்பாட்டு வாரியத்தின் ( Delhi Urban Shelter Improvement Board ) மூலம் முகாம்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவிதா கோவிந்த்,``அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடுவோம். சுகாதார நிபுணர்கள் பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கூறி வருகின்றனர். அந்த வகையில் அந்த அறிவுரையை நாம் அனைவரும் பின்பற்றுவோம்.

கொரோனா
கொரோனா

நோய்த் தடுப்பு நடவடிக்கையாகப் பாதுகாப்பு மாஸ்குகள் கையுறைகளை அணிந்துகொண்டு கொரோனாவை விரட்டுவோம் "என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு