Published:Updated:

`ஆலயத்தில் பிரார்த்தனை நடத்திய பாதிரியார் கைது... மதுக்கடை ஊழியர்களுக்கு கொரோனா!' - கேரளா அப்டேட்

கொரோனா அச்சத்தால், பிரார்த்தனை நடத்திய பாதிரியார் கைது
கொரோனா அச்சத்தால், பிரார்த்தனை நடத்திய பாதிரியார் கைது

மதுக்கடை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று தாக்கியதைத் தொடர்ந்து கேரளாவில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட, முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த, அந்த மாநில அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் ஒருவரிடத்தில் இருந்து மூன்று பேர் வரை பரவ வாய்ப்புள்ளதால், பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாமென்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

corona
corona

எனினும், மக்கள் கேட்டபாடில்லை. தங்கள் இஷ்டத்துக்கு நடமாடி வருகின்றனர். கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறப்பு ஆராதனைகள் என்ற பெயரில் கூட்டமாகக் கூடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார் இதனால், தமிழக அரசு நாளை முதல் 144 தடை உத்தரவை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அச்சுறுத்தும் அமைதி, கொட்டிக்கிடந்த அன்பு... சுய ஊரடங்கு சென்னையில் எப்படி இருந்தது? #ChennaiQuarantineRounds

கேரளாவில் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் பிரார்த்தனை நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார். திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி அருகேயுள்ள நித்ய சகாய மாதா ஆலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்றது. பாதிரியார் பாலி படையாத்தி என்பவர் இந்த பிரார்த்தனையை நடத்தினார். பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

கேரளா மதுக்கடையில் கூட்டம்
கேரளா மதுக்கடையில் கூட்டம்

இதுகுறித்து புகார் எழுந்ததையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரார்த்தனை நடத்திய பாதிரியார் பாலி படையாத்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரார்த்தனையில் கலந்து கொண்ட சபை மக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக, கேரள பிஷப் கவுன்சில் பெரிய கூட்டம் கூடுமளவில் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டாம். சிறுவர்கள், முதியவர்கள் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதைத் தடுக்க பாதிரியார்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. உத்தரவை மீறி பாதிரியார் பாலி படையாத்தி செயல்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

கேரளாவில் காசர்கோடு மாவட்டம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுக்கடை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று தாக்கியதை தொடர்ந்து கேரளாவில் மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவது தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன் உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு