Published:Updated:

`சம்பள உயர்வு; பங்குதாரர்களின் வருவாய்க்கு முன்னுரிமை!’ -சலுகைகளை அறிவித்த தனியார் பெயின்ட் நிறுவனம்

பெயின்ட்ஸ்
பெயின்ட்ஸ்

``அந்நிறுவனம், தனது விற்பனை ஊழியர்கள் தொற்றுக்கு உட்பட்டால் மருத்துவ வசதியை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, விற்பனை மையங்களுக்கான சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றைச் செய்துவருகிறது”

கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக விதிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு சுமார் 50 நாள்களாக அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து அனைத்து விதமான தொழில் நிறுவனங்களையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவையடுத்து தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Economy | பொருளாதாரம்
Economy | பொருளாதாரம்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணியிலிருந்து நீக்குதல், சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் குறைத்தல் போன்ற செயல்களில் இறங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பெயின்ட் தயாரிப்பு நிறுவனமான ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், அனைத்து நிறுவனங்களுக்கும் முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதோடு, பல சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், தனது விற்பனை ஊழியர்கள் தொற்றுக்கு உட்பட்டால் மருத்துவ வசதியை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, விற்பனை மையங்களுக்கான சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் விற்பனையாளர்களுக்கு நேரடிப் பண உதவியளித்தல் ஆகியவற்றை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக, தனது நிறுவனப் பொருள்களை விற்பனைக்கு மொத்தமாக வாங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு 40 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

``செப்டம்பருக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்..!” - `கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்

மேலும் தனது அனைத்துப் பங்குதாரர்களையும் கொரோனா வைரஸ் பரவியுள்ள இந்த இக்கட்டான சூழலில் கவனித்துக் கொள்வதோடு, மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாகவும் செயல்பட விரும்புகிறது என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமீத் சிங்கிள் தெரிவித்துள்ளார். மேலும், பங்குதாரர்களை இழப்பீட்டுக்கு உட்படுத்தாமல் அவர்களை தக்க வைத்துக்கொள்ளும் வண்ணம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளோடு ஆலோசித்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், சந்தையில் உள்ள பெயின்ட் நிறுவனங்களுக்கு முன்னோடி என்பதோடு, எங்களின் ஒவ்வொரு தொழிலாளர்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் என்பதை எங்களின் இச்செயல்களின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு
ஊரடங்கு

இதனிடையே, கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா போராடி வரும் வேளையில், அனைவருடனும் கைக்கோத்து நிற்பதற்காக தேசிய மற்றும் மாநில கோவிட்-19 கொரோனா நிதிகளுக்கு 35 கோடி ரூபாயை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேதியியல் அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், வைரஸுக்கு எதிராக நாட்டின் போராட்டத்திற்கு உதவுவதற்காக கைகள் மற்றும் மேற்பரப்புகளுக்கான சானிட்டைஸர்களை தயாரித்து வழங்கி வருகிறோம். இந்த முயற்சியால் எங்கள் வாடிக்கையாளர்களின் பங்கினை அதிகரிக்க இயலும், என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், `` எங்கள் நிறுவனத்தின் பணப் புழக்கங்களை தீவிரமாகக் கண்காணித்து, செலவுகளை இயன்ற அளவு தள்ளி வைக்க முற்பட்டுள்ளோம். எங்கள் நிறுவனம் கடந்த நான்கு மாதங்களாக கடனில்லாமல் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு நிலவுவதால் நிச்சயமற்ற தன்மை நீடிக்கவுள்ள எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குக் கடனில்லாமல் இருப்பது நிச்சயம் பயனைத் தரும். கடந்த மார்ச் மாதத்தில் எங்கள் நிறுவனம் , பங்குதாரர் வருவாயே எங்களின் முன்னுரிமை என்பதால், ஒரு பெரிய ஈவுத் தொகையை அவர்களுக்கு அறிவித்திருந்தோம்” என்றும் தெரிவித்தார்.

அதலபாதாளத்தில் உலகப் பொருளாதாரம் - சொத்து மதிப்பை உயர்த்தும் உலகப் பணக்காரர்கள்!
அடுத்த கட்டுரைக்கு