Published:Updated:

100 பரிந்துரைகள், 150 மருத்துவமனைகள், இலவச சிகிச்சை, நிதியுதவி! - அதிரடி காட்டிய ஜெகன்

ஆந்திர மாநிலத்தில் மருத்துவ சிகிச்சை, மருத்துவ படிப்பு போன்றவற்றில் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy ( Twitter/@YSRCPDMO )

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் மாநில மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஆந்திர மக்களின் மருத்துவ நலன்களுக்கான புதிய திட்டங்களைத் தயாரிக்குமாறு அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அவர்களும் 100 பரிந்துரைகளைத் தேர்வுசெய்து அதற்கான அறிக்கையை நேற்று முன்தினம் முதல்வரிடம் அளித்துள்ளனர்.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy
Twitter/@YSRCPDMO

100 பரிந்துரைகளில் மிகவும் முக்கியமான நிறைவேற்ற முடிந்த சில திட்டங்களை மட்டும் அறிவித்துள்ளார் ஜெகன். சுகாதார அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மிகவும் முக்கியமானதாக, `ஆந்திரா முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள், தனியாக கிளினிக் வைத்து நடத்துவது, தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வது போன்றவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

மேலும், `ஆரோக்ய ஸ்ரீ ‘ என்ற அரசின் முதன்மை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பெரிய நகரங்களில் 150 உயர்தர மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காப்பீடு வைத்துள்ள மக்கள் மூன்று நகரங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான காப்பீட்டு அட்டைகள் டிசம்பர் 1-ம் தேதி முதல் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

Medical
Medical

ஒரு வருடத்துக்கு ஐந்து லட்சத்துக்கும் குறைவாகச் சம்பளம் பெரும் மக்கள், `ஆரோக்ய ஸ்ரீ' காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொள்ளலாம். அவர்கள் 1000 ரூபாய்க்கு மேல் சிகிச்சைப் பெற்றால் அதன்பிறகு உள்ள அனைத்து தொகையையும் அரசே செலுத்தும். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.

Vikatan

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் குணமடையும்வரை அவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் 2,000 நோய்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஜெகன். கூட்டம் முடிந்த பிறகு மேலும் பல திட்டங்களைப் பற்றிப் பேசியுள்ளார் ஆந்திர முதல்வர்.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy
Twitter/@YSRCPDMO

``கடந்த வருடம் ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் மாற்றம் செய்யவேண்டியது அவசியமாகியுள்ளது. நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் முகத்தை மாற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு இன்னும் நிறைய மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவர்களைப் பணியமர்த்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகராக, நர்சிங் கல்லூரிகளும் கண்காணிக்கப்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பு நிர்ணயம் செய்யும் மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” எனப் பேசியிருக்கிறார் ஜெகன்.