Published:Updated:

மும்பையில் 20 ஆண்டுகள் பேராசிரியர் பணி; 74 வயதில் பெங்களூரில் ஆட்டோ டிரைவர்!

பட்டாபிராமன்

மும்பையில் 20 ஆண்டுகள் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு இன்று தன் 74 வயதில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார் பட்டாபிராமன் அவரின் கதையை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்

மும்பையில் 20 ஆண்டுகள் பேராசிரியர் பணி; 74 வயதில் பெங்களூரில் ஆட்டோ டிரைவர்!

மும்பையில் 20 ஆண்டுகள் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு இன்று தன் 74 வயதில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார் பட்டாபிராமன் அவரின் கதையை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்

Published:Updated:
பட்டாபிராமன்

மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்துவிட்டு கீழே வருவது என்பது பெரும்பாலானவர்களால் முடியாத காரியமாகும். ஆனால் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு இப்போது முதியவர் ஒருவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். பட்டாபிராமன்(74) என்ற அந்த ஆட்டோ டிரைவர் கடந்து வந்த பாதை மிகவும் வித்தியாசமானது. பெங்களூருவில் ஐடி கம்பெனிகள் அதிகமாக இருப்பதால் அதிகமானோர் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், பட்டாபிராமன் தனது வாடிக்கையாளர்கள் ஆங்கிலத்தில் பேசினால் அவர்களிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்பட வைக்கிறார். அப்படித்தான் நிகிதா என்ற பெண் இவரது ஆட்டோவில் ஏற வந்தார். அவரிடம் பட்டாபிராமன் மிகவும் துல்லியமாக ஆங்கிலத்தில் பேசினார். இதனால் ஆச்சரியம் அடைந்த நிகிதா எப்படி இது சாத்தியம் என்று கேட்டதற்கு அவர் தனது கதையை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், "எம்.ஏ.,பி.எட் முடித்துவிட்டு பெங்களூருவில் இருக்கும் கல்லூரிகளில் வேலைக்கு முயற்சி செய்தார். பெரும்பாலான கல்லூரிகள் பிறகு பார்க்கலாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லி அனுப்பின. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு மும்பைக்கு புறப்பட்டு வந்தேன்.

பட்டாபிராமன்
பட்டாபிராமன்

மும்பை பவாய் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுவதில்லை. அதிகபட்சமே 15 ஆயிரம்தான் கொடுத்தார்கள். 20 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 60 வயதில் ஓய்வு பெறும்போது எதிர்காலத்திற்கு என்னிடம் எதுவுமே என்னிடம் இல்லை. நான் வேலை செய்தது தனியார் கல்லூரி என்பதால் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பெங்களூருக்கே வந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிழைப்புக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். தற்போது கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். இதில் தினமும் 700 ரூபாயிலிருந்து 1500 வரை கிடைக்கிறது. இது எனக்கும், எனது பெண் தோழிக்கும் போதுமானதாக இருக்கிறது என்று தெரிவித்தார். பெண் தோழியா என்று கேட்டதற்கு, நான் எனது மனைவியை கேர்ள் பிரண்ட் என்றுதான் அழைப்பேன். எப்போதும் அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும். மனைவி தனக்கு வேலை செய்யும் அடிமை என்று கணவன்மார்கள் நினைக்கிறார்கள். ஆனால் என் மனைவி என்னைவிட எந்த விதத்திலும் குறைந்தவள் கிடையாது. உண்மையில் சில நேரங்களில் என்னைவிட உயர்ந்தவளாக இருக்கிறார். நானும் எனது மனைவியும் தனியாக வசிக்கிறோம். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் எங்களது வீட்டு வாடகையை கொடுத்துவிடுகிறான். மேற்கொண்டு நாங்கள் எங்களின் பிள்ளைகளை சார்ந்து இருக்கவில்லை. அவன் அவனது வாழ்க்கையை வாழ்கிறான். நாங்கள் எங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நான் விரும்பும் நேரத்தில் ஆட்டோவை எடுத்து சென்று என்னால் வேலை செய்ய முடியும். சாலைகளுக்கெல்லாம், நான் தான் ராஜா என்று பட்டாபிராமன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism