Published:Updated:

வரதட்சணையை ஊக்குவிக்கிறாரா அமைச்சர் நிதின் கட்கரி? விளம்பரத்தைப் பகிர்ந்ததால் சர்ச்சை!

Nithin Gatkari

இக்காட்சிகள், மறைமுகமாக வரதட்சணை கொடுப்பதை ஆதரிப்பதுபோல் உள்ளதாகக் கூறியுள்ள நெட்டிசன்கள், அந்த விளம்பரத்துக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அந்த விளம்பரத்தைப் பகிர்ந்து, கருத்து தெரிவித்துள்ளார்.

வரதட்சணையை ஊக்குவிக்கிறாரா அமைச்சர் நிதின் கட்கரி? விளம்பரத்தைப் பகிர்ந்ததால் சர்ச்சை!

இக்காட்சிகள், மறைமுகமாக வரதட்சணை கொடுப்பதை ஆதரிப்பதுபோல் உள்ளதாகக் கூறியுள்ள நெட்டிசன்கள், அந்த விளம்பரத்துக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அந்த விளம்பரத்தைப் பகிர்ந்து, கருத்து தெரிவித்துள்ளார்.

Published:Updated:
Nithin Gatkari

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ள விளம்பர படம் ஒன்று, திருமணத்தின்போது பெண்களுக்குக் கொடுக்கும் வரதட்சணையை ஊக்குவிப்பதாக உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்த வீடியோவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, 6 ஏர் பேக்குகள் கொண்ட கார் வாங்க வேண்டும் என்ற தொனியில் அந்த விளம்பரப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில், காவல்துறை அதிகாரியாக உள்ள நடிகர் அக்சய் குமார், திருமணம் முடிந்து 2 ஏர் பேக்குகள் கொண்ட காரில் பயணிக்கவுள்ள தன் மகளை கவலையுடன் வழியனுப்பும் தந்தையிடம், 6 ஏர் பேக்குகள் கொண்ட கார் பற்றிய விவரங்களைக் கூறுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன.

Akshay Kumar
Akshay Kumar

இக்காட்சிகள், மறைமுகமாக வரதட்சணை கொடுப்பதை ஆதரிப்பதுபோல் உள்ளதாகக் கூறியுள்ள நெட்டிசன்கள், அந்த விளம்பரத்துக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அந்த விளம்பரத்தைப் பகிர்ந்து, 6 ஏர்பேக்குகள் கொண்ட வாகனத்தைப் பயன்படுத்தி, விபத்தில்லாமல் பயணிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கும் இணையத்தில் பலரும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் மும்பை அருகே நடந்த சாலை விபத்தில், பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்த்ரி மரணமடைந்தார். கார் விபத்தின்போது மிஸ்த்ரி மற்றும் ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோர், சீட் பெல்ட் அணியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சைரஸ் மிஸ்த்ரி
சைரஸ் மிஸ்த்ரி

இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு, குறிப்பாக சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக்குகளின் பயன்பாடுகள், அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நிதின் கட்கரியின் பதிவு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.