Published:Updated:

``பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி வரைமுறை... இணைத்துப் பார்க்க வேண்டும்" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

"ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது" என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

``பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி வரைமுறை... இணைத்துப் பார்க்க வேண்டும்" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

"ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது" என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "உச்ச நீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வந்துள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவை மாநில அரசுகள் கட்டாயம் கடைப்பிடிக்கத் தேவையில்லை எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

`ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். கட்டாயப்படுத்த முடியாது’ என்று தீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளைக் கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பல ஆண்டுகளாக மாநில உரிமைகளைக் குறைக்கும் வகையில், கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்பாடுகள் இருந்தன.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இந்நிலையில் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு, சட்ட அமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக்காட்டியுள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை. மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டுவதுதான் கவனிக்கவேண்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உச்ச நீதிமன்றத்தில் பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல வழக்குகள் இதுவரை பதில் இல்லாமல் நிலுவையில் உள்ளன. வரலாற்றில் இல்லாத பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்துகொண்டிருப்பதாக, கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைத்துள்ளோம்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மாநில உரிமைகளைக் காக்கும் முயற்சிகளைக் கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்துகொண்டிருப்பது ஜனநாயகத்துக்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் உள்ளது.

ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளைச் சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படைச் செயல்பாடே பிழையாக உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாகத் திரித்து பரப்பப்பட்டன. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் குறித்து மட்டுமே சட்டமன்றத்தில் பேசினேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism