Published:Updated:

`ஆட்டோமொபைல், ஐ.டி துறைகளுக்கு முக்கியத்துவம்!' - வெற்றி பெறுமா புதுச்சேரி தொழில்முனைவோர் மாநாடு?

புதுச்சேரி

``புதுச்சேரியில் நடக்கவிருக்கும் தொழில்முனைவோர்கள் மாநாட்டில் ஐ.டி, பார்மசூட்டிகள், ஆட்டோமொபைல் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

`ஆட்டோமொபைல், ஐ.டி துறைகளுக்கு முக்கியத்துவம்!' - வெற்றி பெறுமா புதுச்சேரி தொழில்முனைவோர் மாநாடு?

``புதுச்சேரியில் நடக்கவிருக்கும் தொழில்முனைவோர்கள் மாநாட்டில் ஐ.டி, பார்மசூட்டிகள், ஆட்டோமொபைல் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
புதுச்சேரி

தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை, மானியம் போன்றவை நிறுத்தப்பட்டதால், புதுச்சேரியில் இயங்கிவந்த பெரும்பாலான தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டன. அதனால் பல ஆண்டுகளாக புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்றதும், காலியாகவுள்ள 10,000 அரசுப் பணிகள் நிரப்பப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி.

Industry (Representational Image)
Industry (Representational Image)
AP Photo/Rafiq Maqbool

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் தொடர்ச்சியாக முதல்கட்டமாக, காவல் துறையில் காலியாக இருந்த 390 காவலர் பணியிடங்கள் நியமிக்கப்பட்டன. தொடர்ந்து எல்.டி.சி, யூ.டி.சி மற்றும் ஸ்டெனோ கிராபர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது புதிய தொழில்முனைவோர்களைக் கவர்வதற்காக தொழில் முனைவோர்கள் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டிருக்கிறது. புதுச்சேரி அரசும், பிரெஞ்சு வர்த்தக சபையும் இணைந்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்த இருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மாநாடு குறித்து பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ``புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் துறையை மேம்படுத்தவும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்திற்காக சேதராப்பட்டு மற்றும் கரசூர் பகுதிகளில் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலம் தற்போது அரசிடம் இருக்கிறது. அங்கு புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரியில் தொழில் முனைவோர்கள் மாநாட்டை நடத்தவிருக்கிறோம். அதில் ஐ.டி, பார்மசூட்டிகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருக்கிறோம். குறிப்பாக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கவிருக்கிறோம். அதே சமயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே வாய்ப்பையும், வரவேற்பையும் கொடுப்போம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism