Published:Updated:

துப்பாக்கிச்சூடு: `கடலுக்குள் கலவரம்; கரையில் மோதல்!’ - சுருக்குமடி வலையால் புதுச்சேரியில் பதற்றம்

சுருக்குமடி வலை

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக புதுச்சேரி நல்லவாடு, வீராம்பட்டினம் மீனவர்கள் நடுக்கடலில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றம் நீடித்துவருகிறது.

புதுச்சேரியில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், வீராம்பட்டினம் மீனவர்களுக்கும் நல்லவாடு மீனவர்களுக்கும் சுருக்குமடி வலை பயன்படுத்துவது சம்பந்தமாக நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.

புதுச்சேரி மீனவர்கள்
புதுச்சேரி மீனவர்கள்

இந்த மோதலில் நல்லவாடு மீனவர்கள் தங்களது படகு மூலம் வீராம்பட்டினம் மீனவர்கள் மீது மோதினர். இந்த மோதல் கரையிலிருந்த நல்லவாடு, வீராம்பட்டினம் மீனவ கிராமங்களுக்கு தெரியவரவே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இருதரப்பினரும் ஈட்டி, கம்பு, வீச்சருவாள், சுளுக்கு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரையில் ஒன்று திரண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியாங்குப்பம் போலீஸாரும் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். கடற்கரையில் திரண்டிருந்த இருதரப்பு மீனவர்களையும் விரட்டியடித்தனர்.

அப்படியும் அவர்கள் கலைந்து செல்லாததால், வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் கடற்கரையில் பரபரப்பு ஏற்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் நீடித்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism