Published:Updated:

̀பெண்களுக்கு GPS, CCTV-யுடன் கூடிய இலவச பேருந்து!' - புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா
புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா

``பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வாரம் தோறும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்” - அமைச்சர் சந்திர பிரியங்கா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஆகஸ்ட் 26-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்கள் பேசியதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்து, மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பெண்களுக்காக சில பிரத்யேக திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு
நெல் திருவிழா முதல் இலவச பாரம்பர்ய விதைகள் வரை; புதுச்சேரி வேளாண் மானியக்கோரிக்கை ஹைலைட்ஸ்!

``பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வாரம் தோறும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும். பெண்கள் மட்டும் இலவசமாக பயணிக்கும் வகையில் GPS, CCTV வசதியுடன் கூடிய பிங்க் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நான்கு பேருந்துகள் புதிதாக வாங்கப்படும். காற்று மாசுபடுவதைக் குறைக்கும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து 50% விலக்கு அளிக்கப்படும்.

பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பேருந்துகளில் GPS, CCTV வசதிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை ரூ. 25,000 ஆக உயர்த்தப்படும்.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை
அதே அறை, அதே இருக்கை; அப்போ சிறுமி, இப்போ அமைச்சர்; வைரல் புகைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி!

புதுச்சேரி கடற்கரை சாலையில் கலை பண்பாட்டுத்துறைக்கு சொந்தமான இடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்து அங்கு கலைக்கூடம் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு