Published:Updated:

ஒரே ஆண்டில் 22 முறை விற்பனை, அடமானம் வைக்கப்பட்ட கட்டடம்... உரிமையாளருக்கே ஷாக் கொடுத்த கும்பல்!

மோசடி செய்யப்பட்ட கட்டிடம் ( ட்விட்டர் )

புனேவில் உரிமையாளருக்குத் தெரியாமல் நான்கு மாடி குடியிருப்பை, கடந்த ஓராண்டில் சுமார் 22 முறை வாங்கி, விற்கப்பட்டு, அடமானம் வைக்கப்பட்ட வித்தியாசமான மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஒரே ஆண்டில் 22 முறை விற்பனை, அடமானம் வைக்கப்பட்ட கட்டடம்... உரிமையாளருக்கே ஷாக் கொடுத்த கும்பல்!

புனேவில் உரிமையாளருக்குத் தெரியாமல் நான்கு மாடி குடியிருப்பை, கடந்த ஓராண்டில் சுமார் 22 முறை வாங்கி, விற்கப்பட்டு, அடமானம் வைக்கப்பட்ட வித்தியாசமான மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Published:Updated:
மோசடி செய்யப்பட்ட கட்டிடம் ( ட்விட்டர் )

புனேவின் கோந்த்வா பகுதியில் கிரண் சதா, சுமன் கந்த்கேல், நீரு குப்தா மற்றும் அஞ்சலி குப்தா ஆகிய நான்கு பெண்களுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இந்த நான்கு பெண்களும் சேர்ந்து இந்த சொத்தை 1994-ல் வாங்கினார்கள். அவர்கள் 2005-ல் சொத்தை மறுவடிவமைப்பு செய்து நான்கு மாடி குடியிருப்பு கட்டடமாகக் கட்டினார்கள். அதற்கு அவர்கள் 'நந்தன்வன்' என்றும் பெயரிட்டனர். இந்த நிலையில், இந்த கட்டடத்தை விற்க முடிவு செய்த உரிமையாளர்கள், சில ரியல் எஸ்டேட் முகவர்களை அணுகி, அவர்களுடன் தனது சொத்து ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டபோதுதான் இவர்கள் மோசடிக்கு ஆளாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறையிடம் இவர்கள் அளித்த புகாரில், "இந்த கட்டடம் எங்களுக்குச் சொந்தமானது. இதை விற்பனைக்கு வெளியே கொண்டுவந்ததிலிருந்து, ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் என சில வாரங்களில் 100 பேர் எங்களிடம் இது தங்களுக்குச் சொந்தமானது என உரிமைக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மோசடி!
மோசடி!

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரி, "அடமானம் தெரியாத பெண்கள்தான் சொத்து உரிமையாளர்களாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆதார் அட்டையில் அசல் உரிமையாளர்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதிலிருந்த படங்கள் மோசடி செய்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இந்த சொத்து தொடர்பான முதல் பரிவர்த்தனை கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடந்திருக்கிறது. அதில் 4 மாடிக் கட்டடத்தின் முதல் தளம் ஒரு தம்பதிக்கு விற்கப்பட்டிருக்கிறது. மேலும், வெவ்வேறு வங்கிகளில் குறைந்தபட்சம் மூன்று முறை சொத்து அடமானம் வைக்கப்பட்டு மொத்தம் ரூ.2.35 கோடி கடன் பெறப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், மூன்று விதமான அடமானப் பத்திரங்களுக்கு அரசு முத்திரைத் தொகையாகக் குறைந்தபட்சம் ரூ.18.72 லட்சமும், பதிவுக் கட்டணமாக ரூ.90,000 மோசடி செய்ததாகத் தெரியவந்திருக்கிறது. மூன்று அடமான பத்திரங்களில், இரண்டு 'விஷால் கோர்டே' என்ற பெயரில் உள்ளன. அதில் அவர் தனித்தனி பரிவர்த்தனைகளில் கட்டடத்தில் இரண்டு தளங்களை வாங்கி, தலா ஒரு தளத்தை பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா-வில் ரூ.96 லட்சத்துக்கும், காஸ்மோஸ் வங்கியில் 69.87 லட்சத்துக்கும் அடமானம் வைத்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காவல்துறை
காவல்துறை

மூன்றாவது அடமான பத்திரத்தை அனில் அகர்வால் மற்றும் சுனிதா அனில் அகர்வால் என்ற தம்பதியினர் ரூ.70 லட்சத்துக்கு ஒரு தளத்தை வாங்கி, காஸ்மோஸ் வங்கியில் ரூ.96 லட்சத்துக்கு அடமான வைத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது" என விளக்கமளித்திருக்கிறது. ஆனால், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை.  

இந்த சொத்து தொடர்பான 22 பரிவர்த்தனைகளின் பதிவு ஆவணங்கள் வெளியாகியிருக்கின்றன. இவை அனைத்தும் ஜூலை 2021 மற்றும் ஜூலை 2022-க்கு இடையில் செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை பரிவர்த்தனை மோசடிகள் நடந்திருந்தாலும் இது எதுவும் இறுதிவரை சொத்தின் உரிமையாளர்களுக்குத் தெரியவில்லை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.