புனேயை சேர்ந்தவர் பிராச்சி தபல். கேக் தயாரிப்பதில் வல்லுநரான பிராச்சி அதற்காகப் பல விருதுகளை வாங்கி இருக்கிறார். ராயல் ஐஸிங் கேக் தயாரிப்பில் நிபுணரான இங்கிலாந்தை சேர்ந்த சர் எட்டி ஸ்பென்ஸ் என்பவரிடம் முறைப்படி கேக் தயாரிக்கக் கற்றுக்கொண்ட பிராச்சி மிகவும் சிக்கலான வடிவமைப்பான ராயல் ஐஸிங் முறையில் ராட்சத கேக் ஒன்றை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மிலன் கத்தீட்ரல் சர்ச் போன்ற மிகவும் சிக்கலான வடிவமைப்பில் ராயல் ஐஸிங் கேக் தயாரித்துள்ளார் பிராச்சி. 100 கிலோ எடை கொண்ட இந்த கேக் 4.6 அடி உயரம் கொண்ட டவராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது. வழக்கமாக ராயல் ஐஸிங் கேக் முட்டை சேர்க்கப்பட்டுத்தான் தயாரிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் பிராச்சி அதிலிருந்து மாறுபட்டு முட்டை இல்லாத வகையில் வீகன் ராயல் ஐஸிங் கேக் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். ராயல் ஐஸிங் கேக் வழக்கமாக பிரிட்டன் அரச குடும்பத்திற்காக பிரத்யேகமான சுவையுடன் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிராச்சி ஐரோப்பிய கட்டடக்கலையை முன்மாதிரியாகக் கொண்டு முட்டை இல்லாமல் வீகன் ராயல் ஐஸிங் கேக் தயாரித்துள்ளார். அதாவது சைவ கேக் தயாரித்து அதில் உலக சாதனையும் படைத்துள்ளார். இது குறித்து பிராச்சி கூறுகையில், ``இந்த கேக் தயாரிக்க பல ஆண்டுகளாக முயற்சி எடுத்துக்கொண்டேன். அதற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நான் மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.