Published:Updated:

கெஜ்ரிவால் தலைமை... முதல்வர் பக்வந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்; மருத்துவரை மணக்கிறார்!

மணமகளுடன் முதல்வர் மான்

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நாளை இரண்டாவது திருமணம் நடக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்றுள்ளார். 48 வயதாகும் முதல்வர் மான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவி இந்திரபிரீத் கவுர் என்பவரை ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்தார். முதல் திருமணத்தின் மூலம் 2 குழந்தைகள் இருக்கின்றன. பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்ற போது அவர்கள் இருவரும் விழாவுக்கு வந்து கலந்து கொண்டனர். முதல் மனைவி தனது பிள்ளைகளோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

பிள்ளைகளுடன் பக்வந்த் மான்
பிள்ளைகளுடன் பக்வந்த் மான்

இந்நிலையில் மான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். சண்டிகரில் இருக்கும் அரசு இல்லத்தில் நாளை எளிய முறையில் இத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இத்திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மணமகள் பெயர் குர்பிரீத் கவுர் ஆகும். மருத்துவம் படித்திருக்கிறார். முதல்வர் மான் தாயார் திருமணத்தில் பங்கேற்பதற்காக கிராமத்தில் இருந்து சண்டிகர் வந்து முதல்வரின் அரசு இல்லத்தில் தங்கி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெஜ்ரிவால் தலைமை... முதல்வர் பக்வந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்; மருத்துவரை மணக்கிறார்!

திருமணத்தில் அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க இருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருமணத்தையொட்டி முக்கிய பிரமுகர்கள் விழாவிற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப்பில் கேங்க்வார் அபாயம் இருந்து வருவது குறிப்பிடதக்கது.