Published:Updated:

பஞ்சாப் தேர்தல்: ஐந்து முதல்வர் வேட்பாளர்களை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி... ஜெயித்தவர்களின் பின்னணி!

ஜீவன் ஜோத் கவுர், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ( ANI )

'நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.

பஞ்சாப் தேர்தல்: ஐந்து முதல்வர் வேட்பாளர்களை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி... ஜெயித்தவர்களின் பின்னணி!

'நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.

Published:Updated:
ஜீவன் ஜோத் கவுர், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ( ANI )
முதல்முறையாக பிரமாண்ட வெற்றி பெற்று பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆட்சி அவர்களுக்குத்தான் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், 117 தொகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஆட்சியில் அமர்வது மகத்தான சாதனை. டெல்லியை அடுத்து ஆம் ஆத்மி ஆட்சி அமையும் இரண்டாவது மாநிலம் பஞ்சாப். காங்கிரஸும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் என இரண்டே மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே, காங்கிரஸுக்கு சமமான அந்தஸ்தை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது எனலாம்.

பஞ்சாப்பில் முதல்வர் ரேஸில் இருந்த அத்தனை பேரையும் மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதன்மூலம் முறையான எதிர்க்கட்சியே இல்லாமல் செய்ததுடன், வலுவான எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சட்டமன்றத்துக்குள் நுழைய முடியாதபடி செய்துவிட்டது.

ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி
ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்சியை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்தவர் சரண்ஜித் சிங் சன்னி. இவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடவும் வைத்தது காங்கிரஸ். இரண்டு தொகுதிகளிலும் அவர் தோற்றுவிட்டார்.

பதார் தொகுதியில் லப் சிங் உகோக் என்ற எளிய ஆம் ஆத்மி தொண்டரிடம் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் சன்னி தோற்றிருக்கிறார். லப் சிங்கின் தந்தை டிரைவராக இருக்கிறார். அம்மாவோ அரசுப் பள்ளி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார்.

லப் சிங் உகோக்
லப் சிங் உகோக்
"முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டதால் எனக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்தது. தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் நான் பணி செய்திருக்கிறேன். அதனால் மக்கள் எனக்கு வாக்களித்தனர்."
லப் சிங்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சம்கார் சாஹிப் என்ற இன்னொரு தொகுதியிலும் முதல்வர் சன்னிக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த முறை இங்கு அவர் ஜெயித்திருந்தார். இம்முறை அவர் பெயர் கொண்ட சரண்ஜித் சிங் என்ற ஆம் ஆத்மி வேட்பாளரிடமே அவர் தோற்றுவிட்டார். இந்த சரண்ஜித் கண் மருத்துவராக இருக்கும் கோடீஸ்வரர்.

காங்கிரஸில் முதல்வர் பதவிக்காக முட்டி மோதிய இன்னொருவர் நவ்ஜோத் சிங் சித்து. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சியில் நிகழ்ந்த பல குழப்பங்களுக்கு சித்துவே காரணமாக இருந்தார். முதல்வர் சன்னியை வெளிப்படையாக விமர்சனம் செய்தார். சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. 'நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

'பஞ்சாப்பின் pad woman' என்று அழைக்கப்படும் ஜீவன் ஜோத், கல்விச்சேவை செய்துவருபவர். சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து பள்ளிகள், குடிசைப்பகுதிகள், பெண் சிறைக்கைதிகளுக்கு வழங்கிவருபவர். இந்தச் சேவையால் மாநிலம் முழுக்க கவனம் பெற்ற ஜீவன் ஜோத், முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான காலம் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் எழுந்த கலாட்டாவில் பதவியை ராஜினாமா செய்தவர். பிறகு கட்சியை விட்டே விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

ஜீவன் ஜோத் கவுர்
ஜீவன் ஜோத் கவுர்
Twitter @jeevanjyot20

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'பாட்டியாலா மகாராஜா' என்று அழைக்கப்படும் அவர் தன் ராஜ்ஜியமான பாட்டியாலா நகர்ப்புறத் தொகுதியில் பரிதாபமாகத் தோற்றிருக்கிறார். அவரை வீழ்த்தியவர், ஆம் ஆத்மியின் அஜித்பால் சிங் கோலி. சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்தபோது பாட்டியாலா மேயராக இருந்தவர் இவர். தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, உடனே வேட்பாளராகவும் ஆனார். அமரிந்தர் சிங்கை வீழ்த்த இவர்தான் சரியான ஆள் என்று கெஜ்ரிவால் முடிவு செய்திருக்கிறார்.

அஜித்பால் சிங் கோலி
அஜித்பால் சிங் கோலி

சிரோமணி அகாலி தளமும் கடும் சேதாரத்தை சந்தித்திருக்கிறது. நான்கு முறை பஞ்சாப் முதல்வராக இருந்தவர் இந்தக் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல். லம்பி தொகுதியில் இவரைத் தோற்கடித்திருக்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் குர்மீத் சிங் குடியான். 25 ஆண்டுகள் இதே தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த செல்வாக்கான தலைவரான பாதலை வீழ்த்திய குர்மீத் சிங், இரண்டு மாதங்களுக்கு முன்புவரை காங்கிரஸில் இருந்தவர். தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மிக்கு வந்து வென்றுவிட்டார்.

குர்மீத் சிங் குடியான்
குர்மீத் சிங் குடியான்

பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல். கடந்த சிரோமணி அகாலி தள ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர். இம்முறை கட்சி ஜெயித்தால் இவர்தான் முதல்வர் என்று பேசப்பட்டது. ஆனால், சுக்பீர் சிங் ஜலாலாபாத் தொகுதியில் பரிதாபமாகத் தோற்றுவிட்டார். இவரை வீழ்த்திய ஆம் ஆத்மி வேட்பாளர், ஜெக்தீப் காம்போஜ். இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக இருந்த இவர், காங்கிரஸில் சீட் கிடைக்காததால் ஆம் ஆத்மிக்குத் தாவியவர். மூன்று முறை இந்தத் தொகுதியில் ஜெயித்த சுக்பீர் சிங்கை 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

ஜெக்தீப் காம்போஜ்
ஜெக்தீப் காம்போஜ்
பஞ்சாப் தேர்தல் களத்தில் இருந்த ஐந்து முதல்வர் வேட்பாளர்களையும் ஆம் ஆத்மி கட்சியே வீழ்த்தியது விநோதம். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தான் போட்டியிட்ட துரி தொகுதியில் அத்தனை வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து ஜெயித்திருக்கிறார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism