Published:Updated:

``மனதளவில் ராவணன் நல்லவன்... ராமன் கெட்டவன்!" - பஞ்சாப் பேராசிரியை பணியிடை நீக்கம்

லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம்

பஞ்சாப்பின், லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியதாக, உதவிப் பேராசிரியை ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

``மனதளவில் ராவணன் நல்லவன்... ராமன் கெட்டவன்!" - பஞ்சாப் பேராசிரியை பணியிடை நீக்கம்

பஞ்சாப்பின், லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியதாக, உதவிப் பேராசிரியை ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Published:Updated:
லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்துவருபவர் குர்சங் ப்ரீத் கௌர்.இவர் ராமர் குறித்துப் பேசிய ஆடியோ க்ளிப் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த ஆடியோவில், ``மனதளவில் ராவணன் நல்லவன். ஆனால், ராமன் நல்லவனில்லை... ராமனை ஒரு தந்திரக்காரனாக நான் பார்க்கிறேன். ராமன், சீதையை ராணுவனனிடம் சிக்கவைக்க திட்டம் தீட்டி, இறுதியில் சீதையைச் சிக்கவைத்துவிட்டு எல்லாப் பழியையும் ராவணன் மீது போட்டுவிட்டான். இதில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று நாம் எப்படி முடிவு செய்ய முடியும்... இன்று உலகமே ராமனைத் தொழுதுவிட்டு, ராவணனைக் கெட்டவன் என்கிறது. ஆனால், ஒரு செயலை திட்டமிட்டுச் செய்த ராமன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்... ராமன் தந்திரமானவன்" எனப் பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் பேசியிருக்கிறார்.

ராமர்
ராமர்

இந்த ஆடியோ வைரலானதையடுத்து, ராமரைப் பற்றி அவதூறாகப் பேசியதாக உதவிப் பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் மீது புகார்கள் எழுந்தன. இதன் காரணமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் குர்சங் ப்ரீத் கௌரைப் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்த பல்கலைக்கழக நிர்வாகம், ``ராமரைப் பற்றிய குர்சங் ப்ரீத் கௌரின் பேச்சு, அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும், நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மீறியதற்காக, குர்சங் ப்ரீத் கௌர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" எனக் கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில், பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் தன் சுயவிவரங்களை குர்சங் ப்ரீத் கௌர் நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism