Published:Updated:

Rafale: `7,000 கி.மீ; 2 நாள்கள்: நடுவானில் எரிபொருள்!’ - இந்தியா புறப்பட்டது ரஃபேல்

Rafale | ரஃபேல்
Rafale | ரஃபேல் ( Indian Air Force )

இந்தியா - பிரான்ஸ் உறவில் இந்த நிகழ்வு ஒரு மைல்கல் என பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும் ரஃபேல் விமானங்களை ``ப்யூட்டி அண்டு தி பீஸ்ட்” எனவும் வர்ணித்துள்ளது.

இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனம் இடையே 2016-ம் ஆண்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவில் ஊழல் சர்ச்சைகளும் பெரிய அளவில் வெடித்தது. எதிர்க்கட்சிகளால் கடுமையான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது. ரஃபேல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மத்திய அரசு அந்தத் தகவல்களைத் தர மறுத்துவிட்டது. தற்போது அனைத்து சர்ச்சைகளையும் கடந்து, முதற்கட்டமாக விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுவிட்டது.

Rafale | ரஃபேல்
Rafale | ரஃபேல்
Indian Air Force

நாட்டில் ஊழல் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் விமானங்களை முறைப்படி இந்தியா சார்பாகப் பெற்றுக்கொண்டார். ஒப்பந்தத்தின்படி இந்த வருடம், மே மாதம் வரவிருந்த ரஃபேல் விமானங்கள், கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள், இன்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.

ரஃபேல் விமானிகள்
ரஃபேல் விமானிகள்
Indian Air Force

ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானிகளே இயக்கிக் கொண்டு இந்தியா வருகிறார்கள். ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர், வரும் 29-ம் தேதி அவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகிறது.

சுமார் 7,000 கிலோ மீட்டர்களை கடந்த வரும் 29-ம் தேதி ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்படுகிறது. நடுவில் யு,ஏ.இ-யில் மட்டும் நிறுத்தப்படும். நடுவில் எரிபொருள்கள் நடுவானிலே நிரப்படவுள்ளது. இந்தப் போர் விமானத்தின் ஒரு சிறப்பம்சத்தில் இதுவும் குறிப்பிடத்தக்கது. முக்கிய ஆபரேஷனின் நடுவில் எரிபொருள் நிரப்புவதற்காக கூட தரையிறக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வான் வழி பாதுகாப்பு மேலும் உறுதி செய்யபடும் எனக் கூறப்படுகிறது. உலகின் அதிநவீன போர் விமானங்களில் ரஃபேல் முன்னணியில் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்தியா பிரான்ஸ் உறவில் இந்த நிகழ்வு ஒரு மைல்கல் என பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், ரஃபேல் விமனங்களை ``ப்யூட்டி அண்டு தி பீஸ்ட்” எனவும் வர்ணித்துள்ளது. இந்தியாவுக்கு புறப்பட்ட 5 ரஃபேல் விமானங்களில் 3 விமானங்கள் ஒருவர் மட்டுமே இருந்து இயக்கும் படியானது. மற்ற இரண்டு விமானங்கள், இருவர் அமர்ந்து இயக்கும்படியானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rafale | ரஃபேல்
Rafale | ரஃபேல்
Indian Air Force

``இந்த ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்களும் மிக விரைவானவை, அழகானவை மற்றும் மிகவும் ஆபத்தான விமானங்கள். சரியான நேரத்தில் விமானங்களை வழங்கிய டசால்ட், ஒத்துழைப்பு வழங்கிய பிரான்ஸ் அரசு மற்றும் ஃபிரான்ஸ் விமானப்படைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என ஃப்ரான்ஸுக்கான இந்திய தூதர் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 31 விமானங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு