Published:Updated:

`நான் வெளிநாட்டவர்; எந்த பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுராம் ராஜன்!

மலையரசு

ஏற்கனவே கடந்த வருடம் இந்தப் பதவிக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அப்போதே திட்டவட்டமாக மறுத்தார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். அங்கு பணிபுரிந்தாலும் வங்கிகள் தொடர்பாக அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். அதேபோல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோதே பண மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர்ப் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பியது கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

இந்நிலையில், லண்டனை தலைமையிடமாகக்கொண்டு, இங்கிலாந்தின் தலைமை வங்கியாக இயங்கும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் கவர்னர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் இந்தப் பதவிக்கு அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதை அப்போதே திட்டவட்டமாக மறுத்தார்.

இந்தநிலையில் தான் மீண்டும் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் பரவ அது குறித்து பிபிசிக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், ``தற்போது நான் இருக்கும் வேலையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பேங்க் ஆஃப் இங்கிலாந்து உட்பட எந்த வங்கி பணிக்கும், நான் விண்ணப்பிக்கவில்லை. மத்திய வங்கிகளில் தற்போது மிகப் பெரிய அரசியல் உள்ளது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து
பேங்க் ஆஃப் இங்கிலாந்து

எனவே ஒரு நாட்டின் அரசியல் சூழலை நன்கு புரிந்தவர்கள், அந்த நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநராக வந்தால் தான் சிறப்பான ஒன்றாக இருக்கும். நான் வெளிநாட்டைச் சார்ந்தவன். அதனால் நான் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் பதவிக்காக விண்ணப்பிக்கவில்லை" எனப் பேசியுள்ளார்.