Published:Updated:

`இந்தியப் பொருளாதாரத்தின் தேக்கநிலை கவலையளிக்கிறது’ - எச்சரிக்கும் ரகுராம் ராஜன்

கலிலுல்லா.ச

`இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிவரும் தேக்கநிலை கவலையளிக்கிறது’ என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

raghuram rajan
raghuram rajan

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்தவர், ரகுராம் ராஜன். வங்கியிலிருக்கும் பணத்தை பரிமாற்றம் செய்ய நேரடியாக வங்கிக்குச் செல்லவேண்டிய நிலையை மாற்றி, யூபிஐ பணப்பரிமாற்ற முறையைக் கொண்டுவந்தவர். திறன் வாய்ந்த பொருளாதார வல்லுநர் எனப் பெயர்பெற்றவர். தற்போது, `இந்தியாவின் பொருளாதார நிலை’ குறித்து எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய ரகுராம் ராஜன், ``பல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையைப் போக்க, சீர்திருத்தம் அவசியம். இதைச் சரிசெய்வதன்மூலம் தனியார் முதலீட்டை அதிகரிக்க முடியும்.

raghuram rajan
raghuram rajan

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, மிகவும் கவலைக்குரிய விஷயம். இதை மத்திய அரசு உடனடியாகச் சரி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுமட்டும் அல்லாமல், தனியார் நிறுவனங்களை அதிக முதலீடுசெய்யும் வகையில் கொள்கை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

``நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் ஜிடிபி (GDP) முறையை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு மாற்றாக, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கணிக்க புதுமுறையைக் கையாள வேண்டும். அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை, 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலையில் வெவ்வேறானது.

raghuram rajan
raghuram rajan

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிகுறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்தக் கணிப்பு, மத்திய அரசின் கணிப்பைவிட மிகவும் குறைவாக உள்ளது. இதேநிலை தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வருத்தப்படும் அளவிற்கு மோசமான நிலையை அடையும்” என்று எச்சரித்துள்ளார்.