Published:Updated:

வீட்டை விட்டு ஓடிவந்த 477 குழந்தைகள்; மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்புப் படை!

ரயில் தண்டவாளத்தில் சிறுவர்கள் (Representational Image)
ரயில் தண்டவாளத்தில் சிறுவர்கள் (Representational Image)

நடப்பு ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் உள்ள ரயில் நிலையங்களில் 477 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவர்களை பத்திரமாக அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மும்பைக்கு ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுவர்கள், சிறுமியர்கள் வீட்டில் கோபித்துக்கொண்டு, அல்லது நல்ல வேலை, அல்லது நடிகர்களை பார்க்கவேண்டும் போன்ற காரணங்களால் வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிவதுண்டு. அப்படிப்பட்டவர்களை மீட்டு அவர்களின் பெற்றோருடன் சேர்க்கும் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் மட்டும் மகாராஷ்டிராவில் உள்ள ரயில் நிலையங்களில் 477 குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவர்களை பத்திரமாக அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மும்பை ரயில் நிலையம்
மும்பை ரயில் நிலையம்
கேங்ஸ்டர்களாக மாறிய சிறுவர்கள்... அச்சத்தில் உறைந்த வேலூர் மக்கள்!

தொண்டு நிறுவனத்தின் துணையோடு ரயில்வே பாதுகாப்புப் படையினர் இந்தப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். மும்பைக்கு வரும் குழந்தைகளில் அதிகமானவர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லாமல்தான் வருகின்றனர். மும்பையிலும் அவர்களுக்கு யாரையும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே அதிக நேரம் ரயில் நிலையத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இது போன்றவர்களை கண்டுபிடித்து மீட்பதற்காக ரயில்வே பிளாட்பாரங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நடப்பு ஆண்டில் மட்டும் 477 பேரை மீட்டுள்ளனர். அவர்களில் 167 பேர் பெண் குழந்தைகள். மும்பை, புனே, நாக்பூர், புசாவல், சோலாப்பூர் போன்ற மத்திய ரயில்வே மண்டலங்களில் இருந்து இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

Children (Representational Image)
Children (Representational Image)
Image by Gerd Altmann from Pixabay
பெற்றோர்களே... குழந்தைகளுக்கு இதைக் கற்றுக்கொடுங்கள்! | சொல் புதிது | பர்வீன் சுல்தானா

பாட்னாவை சேர்ந்த 17 வயதுப் பெண் மாடலிங் துறையில் சாதிக்கவேண்டும் என்று கூறி பெற்றோரிடம் தெரிவிக்காமல் மும்பை வந்திருந்தார். இதே போன்று, தெலங்கானாவைச் சேர்ந்த 14 வயதுப் பெண் தன் அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு மும்பை வந்திருந்தார். தங்கள் குழந்தைகள் மீண்டும் கிடைத்திருக்கும் நிலையில் அந்தப் பெற்றோர்கள் ரயில்வே போலீஸாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். வீட்டை விட்டு ஓடி வரும் சிறுவர்களுக்கு ரயில்வே அதிகாரிகள் போதிய அளவு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் அனுப்பி வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு