Published:Updated:

`காற்றிலிருந்து குடிநீர்!' - செயல்வடிவம் பெற்ற ரயில்வேயின் புதிய முயற்சி

இதற்காக `மேக்தூத்' என்ற பெயரிலான இயந்திரம் அங்கு நிறுவப்பட்டிருக்கிறது.

காற்றிலிருந்து குடிநீர்
காற்றிலிருந்து குடிநீர்

காற்றிலிருந்து நேரடியாக நீரைப் பெறும் இயந்திரத்தை ரயில்வே பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட குடிநீரானது பல்வேறு தர பரிசோதனைகளுக்குப் பிறகு முதன்முறையாக ரயில்வே துறையால் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக `மேக்தூத்' என்ற பெயரிலான இயந்திரம் அங்கு நிறுவப்பட்டிருக்கிறது.

மேக்தூத்
மேக்தூத்

வெப்பமயமாதல் போன்ற பல்வேறு சூழல் காரணங்களால் நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. பூமியில் மொத்தம் இருக்கும் நீரில் 0.03 % மட்டுமே நம்மால் உபயோகிக்க முடியும். தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி தினந்தோறும் பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காற்றிலிருந்து நீரை எடுத்து அதைக் குடிநீராக தகுதிப்படுத்தி சாத்தியமாக்கியிருக்கிறது ரயில்வே.

மைத்திரி அக்வா டெக் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தொழிற்நுட்பத்தின் பெயர் ``மேக்தூத் `இது ஒரு' நீர் ஜெனெரேட்டர்" இந்தத் தொழில்நுட்பம் வளிமண்டலத்திலிருந்து காற்றை உறிஞ்சி இழுத்து அதைத் தண்ணீராக மாற்றுகிறது. முதலில் காற்றினை ஏர் பில்டர்கள் மூலம் இழுத்து அதில் உள்ள ஈரப்பத்தினைப் பயன்படுத்தி காற்றை நீராக மாற்றி ஒரு தொட்டியில் சேமிக்கிறது. தொட்டியில சேமிக்கப்பட்ட அந்த நீரை பலகட்ட சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்தி குடிநீராக மாற்றப்படுகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் இந்த சாதனத்துக்கு உள்ளது, மேலும் இந்தக் கண்டுபிடிப்பு முழுக்க முழுக்க "இந்தியன் - மேக் " ஆகும்.

இந்த நடைமுறையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இந்த இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட குடிநீர், இந்தியாவில் முதற்கட்டமாக தென்னக ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2 லிருந்து ரூ.8 வரை இந்தக் குடிநீரின் விலையை நிர்ணயித்துள்ள ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குகிறது,

569 யானைகளைக் காப்பாற்றிய வடக்கிழக்கு ரயில்வே... செயலில் இறங்குமா தென்னக ரயில்வே?

பிளாஸ்டிக் பாட்டில் உடன் கூடிய ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ. 8 ஆகும். பயணிகள் தங்கள் சொந்த பாட்டில்கள் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.5 ஆகும். ஒரு லிட்டர் என்ற அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இல்லாமல் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அரை லிட்டர் மற்றும் 300 மில்லி லிட்டர் ஆகிய அளவுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நீர் சிக்கனம் குறித்த டேக் லைனுடன் இந்தத் திட்டத்தின் காணொலித் தொகுப்பினைப் பதிவிட்டுள்ளார். இந்தத் திட்டம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.