Published:Updated:

`ஐசோலேஷன் வார்டுகளாகும் ரயில் பெட்டிகள்?’ - கொரோனாவைத் தடுக்க கிராமங்களுக்கு படை எடுக்கும் ரயில்வே

சுத்தம் செய்யப்படும் ரயில்
சுத்தம் செய்யப்படும் ரயில்

நேற்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே உயரதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ரயில்வே துறையால் கொரோனா வைரஸை விரட்ட என்ன என்ன உதவிகள் செய்ய முடியும் என விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் இந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் அனைத்துத்துறை அதிகாரிகளையும் தீவிரமாகப் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா
கொரோனா

அந்த வகையில் இந்திய ரயில்வேயும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்கள் அல்லது மிகவும் பிந்தங்கிய சூழலில் உள்ள கிராமங்களுக்கு ரயில் பெட்டிகளை `ஐசோலேஷன்’ வார்டாக மாற்றும் யோசனையை ரயில்வே பரிசீலித்து வருகிறது. தற்போது வரையில் நாடு முழுவதும், வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை ரயில்வே சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

நேற்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே உயரதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் ரயில்வே துறையால் கொரோனா வைரஸை விரட்ட என்ன என்ன உதவிகள் செய்ய முடியும் என விவாதிக்கப்பட்டது. வெண்டிலேட்டர்ஸ் தயாரிப்பது, தற்காலிக படுக்கைகள், ட்ராலிகள் தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் கழிவறைகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை கொரோனா வைரஸுக்கான தீவிர சிகிச்சை பிரிவாக மாற்றும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.

பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

முன்னதாக அனைத்துத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மோடி, ``கொரோனா வைரஸுக்கு எதிராக, நாம் போராட புதிய திட்டங்களுடன் வர வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாகவே ரயில்வே கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. மேலும், அமைச்சர் பியூஸ் கோயல், அதிகாரிகள் அனைவரும் கொரோனா வைரஸின் மூன்றாவது நிலைக்கு, அதாவது கொரோனாவின் சமூக பரவலுக்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

`கைதட்டல்... ஆரவாரம்..!’  -கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய தம்பதியை நெகிழ வைத்த மக்கள்

மேலும் பஞ்சாப்பில் இயங்கி வரும் ரயில்வே தொழிற்சாலை ரயில் பெட்டிகளை ஐசோலேஷன் வார்டாக மாற்றும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் இயங்கி வரும் ரயில் தொழிற்சாலையில் வெண்டிலேட்டர்களைத் தயாரிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு