Published:Updated:

`குழந்தை திருமணத்தை பதிவு செய்யவேண்டும்!' - சர்ச்சையான ராஜஸ்தான் மசோதா; தடுத்து நிறுத்திய ஆளுநர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Marriage - Representational Image
Marriage - Representational Image ( Photo: LVR சிவக்குமாா் )

குழந்தை திருமணம் உட்பட அனைத்து வகையான திருமணங்களையும் பதிவு செய்யவேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் ராஜஸ்தான் அரசு வழிவகுத்துள்ளது என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் மாநில ஆளுநர் இந்த மசோதாவை தடுத்து நிறுத்தியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகம் முழுக்கக் குழந்தை திருமணத்திற்கு எதிரான பிரசாரங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், ராஜஸ்தானில் குழந்தை திருமணத்தை ஊக்கப்படுத்தும் விதமாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கடந்த மாதம், அம்மாநில திருமணச் சட்டத்தில் திருத்தம் (The Rajasthan Compulsory Registration of Marriages (amendment) Bill, 2021) கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, `அனைத்து விதமான திருமணங்களும் பதிவு செய்யப்படவேண்டும். திருமணமாகக்கூடியவர் மைனராக இருக்கும் பட்சத்தில், அவர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் திருமணம் நடந்த 30 நாள்களுக்குள் அதனை பதிவு செய்து கொள்ளவேண்டும்' என்று திருமணத்துக்கான புதிய திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் இம்மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் மாநில சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் அளித்துள்ள விளக்கத்தில், `இந்தச் சட்டத்திருத்தம் குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. அதே நேரம், திருமணப் பதிவு சான்று என்பது சட்டபூர்வ ஆவணமாகும். இதன் மூலம் கைம்பெண்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியும்.

Law- Representational Image
Law- Representational Image
Image by succo from Pixabay
வேலூர்: குழந்தைத் திருமணம்; வயது வித்தியாசம்! - குடிகாரக் கணவனால் பறிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உயிர்

சுப்ரீம் கோர்ட் 2006-ம் ஆண்டு அனைத்து வகையான திருமணங்களையும் பதிவு செய்யவேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில்தான் இப்போது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை பதிவு செய்துவிட்டால் மட்டும் அத்திருமணம் சட்டபூர்வமானது கிடையாது.

குழந்தை திருமணம் செய்து கொள்ளும் ஒருவர் பெரியவரான பிறகு, தனது குழந்தைத் திருமணத்தை ரத்து செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.

ஆனால், `உச்ச நீதிமன்றம் குழந்தை திருமணங்களை பதிவு செய்யவேண்டும் என்று சொல்லவில்லை' என்று ராஜஸ்தானில் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போராடி வரும் கீர்த்தி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சந்தேகம் இருப்பின் அது குறித்து முறைப்படி கோர்ட்டை அணுகி விளக்கம் பெற்று இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

குழந்தை திருமணத்திற்கு எதிராகப் போராடி வரும் மற்றொரு சமூக ஆர்வலர் கவிதா இது குறித்து கூறுகையில், `மைனர்களின் திருமணத்தையும் பதிவு செய்யவேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதன் மூலம் குழந்தைகளின் திருமணத்தை அரசு அங்கீகரித்ததாகவே கருத முடியும். இந்த மசோதாவை உடனே அரசு திரும்பப் பெறவேண்டும். திரும்பப் பெறாத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று தெரிவித்திருக்கிறார்.

Kalraj Mishra
Kalraj Mishra
Twitter Photo: @KalrajMishra

தனக்கு 15 வயதில் நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ரூபா சவுத்ரி என்ற பெண், இப்போது திருமணமாகி செவிலியராக வேலை செய்கிறார். புதிய மசோதா குறித்து ரூபா கூறுகையில், ``அரசு கொண்டு வந்திருக்கும் மசோதா வரவேற்கத்தக்கது. அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதன் மூலம்தான் குழந்தை திருமணம் தடுக்கப்படும். குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பாகவும் அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய மசோதாவிற்கு பா.ஜ.க மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். புதிய மசோதாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் இம்மசோதாவிற்கு மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முட்டுக்கட்டை போட்டுள்ளார். இம்மசோதாவை முழுமையாக சட்ட ஆலோசனைக்கு உட்படுத்த ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

இந்தியா முழுக்க ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள், திருமண வயதை எட்டும் முன்பாகவே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர் என்று புள்ளி விபரம் கூறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு