Published:Updated:

`15 அடி ஆழத்தில் சிக்கிய 4 வயது குழந்தை!'- ராஜஸ்தானைப் பதறவைத்த ஆழ்துளைக் கிணறு

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

மீட்புப்பணிகள்
மீட்புப்பணிகள் ( ANI )

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியில் 4 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். தற்போது சிறுவனை மீட்கும் பணி நடந்துவருகிறது.

சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கும்போது அருகில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் அப்பகுதியில் சூழ்ந்துள்ளனர். மீட்புப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருகிறார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்
ஆக்ஸிஜன் சிலிண்டர்

சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் 15 அடி ஆழத்தில் தற்போது சிக்கியுள்ளான். பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டி வருகின்றனர்.

மருத்துவக்குழு அங்கே வரவழைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டு வருகிறது. சிறுவன் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுவனுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்பதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகிறது.