Published:Updated:

`குழந்தைத் திருமணத்தை நியாயப்படுத்துவதா?’ - திருமண கட்டாயப் பதிவுச் சட்டத் திருத்தத்துக்குக் கண்டனம்

திருமண கட்டாயப் பதிவு சட்டத் திருத்த மசோதா 2021-ன் படி 30 நாள்களில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ராஜஸ்தான் அரசு, திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து, அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது.

திருமண கட்டாயப் பதிவு சட்டத் திருத்த மசோதா 2021-ன் படி, 30 நாள்களில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்ய கூடுதலாக DMRO மற்றும் BR MRO ஆகியோரை நியமிக்க வேண்டும் போன்ற திருத்தங்களுடன் வெள்ளிகிழமை சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதாவில் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் திருமணமும் 30 நாள்களில் பதிவுசெய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில், குறிப்பிட்ட பிராந்தியத்தில் சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது’ என எதிர்க்கட்சிகளாலும், சமூக ஆர்வலர்களாலும் தீவிரமாக விமர்சிக்கப்பட்டுவருகிறது இந்தத் திருத்தச் சட்டம். 2019 நிலவரப்படி ராஜஸ்தானில் ஓர் ஆண்டுக்கு15 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. வங்காளம், பீகார் வரிசையில் ராஜஸ்தானும் நாட்டில் அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறும் மாநிலமாக இருக்கிறது.

திருமணம்
திருமணம்
Representational Image

இது குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் எம்.எல்.ஏ சன்யம் லோதா, ``திருமண கட்டாயப் பதிவு சட்டம் 2009 பிரிவு, 8-ல் செய்யப்பட்டிருக்கும் திருத்தம், குழந்தைத் திருமணத்தை நியாயப்படுத்துவதாக இருப்பது மிகவும் தவறு! மக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைத்து, ஆளாக்க எண்ணும் சூழலில், இந்தச் சட்டம் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது. ஆளுங்கட்சி ஒட்டுமொத்த தேசத்துக்கு முன்னும் ராஜஸ்தான் சட்டமன்றத்தை அவமானப்படுத்தியிருக்கிறது" எனக் கூறினார். முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராக அறியப்படும் லோதா, மேலும் கூறுகையில், ``முதல்வர், வாழ்கை முறையாலும் செயல்களாலும் மாநிலத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார். எனினும், மாநிலத்தின் முற்போக்கான பிம்பம் காக்கப்படவேண்டி இந்தச் சட்டம் நிறைவேறக் கூடாது’’ எனக் கூறினார்.

2009-ம் ஆண்டு, பாஜக அரசு கொண்டுவந்த கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தின்படி, 21வயதுக்கு உட்பட்டவர்கள் திருமணம் செய்துகொண்டால், அவர்களின் பாதுகாவலர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். திருமணம் ஆன 30 நாள்களில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் திருமணம் நடந்ததற்கான ஆதாரத்தை மனுவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை, குழந்தைத் திருமணமும் 30 நாள்களில் பதிவு செய்தாக வேண்டும் என்று திருத்துகிறது காங்கிரஸ் அரசு.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

2009-ம் ஆண்டு திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டபோது சட்டசபை உறுப்பினராக இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ குலாப் சந்த் கட்டாரியா தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். சட்டத் திருத்தம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய அவர், ``நீங்கள் மைனர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கிறீர்கள், ஆனால் 30 நாள்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற திருத்தத்தை மட்டும் மேற்கொண்டிருக்கிறீர்கள். இது குழந்தை திருமண தடைச் சட்டதுக்கு எதிராக இருக்கிறது. மைனர் குழந்தைகள் திருமணத்துக்கு அரசு சான்றிதழ் வழங்குவது எப்படிச் சரியாக இருக்கும்? நாங்கள் ஒரு முறை தவறு செய்தோம். அதே தவற்றை நீங்களும் திரும்பச் செய்கிறீர்கள்" எனவும் கூறி 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மன்னிப்புக் கேட்டார். 2009-ம் ஆண்டும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினகரன் மகள் திருமணம்:
கலந்துகொள்ளாத திவாகரன்;  மெளனம் காத்த சசிகலா!

எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் சாந்தி தரிவால், ``நாங்கள் மத்திய அரசின் சட்டத்தை மீறவில்லை, 2006 உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். தவிர குழந்தைத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. குழந்தைத் திருமணத்தில் எப்போதும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முடியும். திருமணத்துக்கு பிறகு பதிவு செய்ய மட்டுமே சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது" என்று பதிலளித்தார்.

இந்தச் சட்டம் முற்றிலும் தவறாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் சட்டசபையிலிருந்து வெளியேற, குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டப்பேரவையில் நிறைவேறியது திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு