Published:Updated:

லிஃப்ட் தருவதாகக் கூறி பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; கொலை செய்து கிணற்றில் வீசிய கும்பல்!

Sexual Harassment (Representational Image)

பேருந்தில் இருந்து இறங்கிய பின்பு வீடு செல்ல நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு, காரில் லிப்ட் கொடுப்பதாக கூறி, அழைத்து சென்றுள்ளனர்.

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை 35 வயது பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை நேற்று கைது செய்த நிலையில், மற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞாயிற்றுக்கிழமை காலை ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்குப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார் இப்பெண். பேருந்தில் இருந்து இறங்கிய பின்பு வீடு செல்ல நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு, காரில் லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி, அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் விடாமல் தூரமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண்ணைக் கொன்று, உடலை கிணற்றில் வீசியதாக தௌசாவின் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் குப்தா தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட காரை கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை காலை கிணற்றிலிருந்து அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், குற்றத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மற்ற குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism