Published:Updated:

ராஞ்சி: சிகிச்சை கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலேயே உயிரிழந்த அப்பா... பொங்கி எழுந்த மகள்!

Death
News
Death

இவ்வளவு ஏன்? குறைந்தபட்சம் முதலுதவியைக்கூட அவர்கள் வழங்கவில்லை. தன்னுடைய தந்தைக்கு சிகிச்சை தர வேண்டி அந்தக் கொரோனா நோயாளியின் மகள் கண்ணீர் மல்கப் பேசியிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள சதார் என்கிற அரசு மருத்துவமனையின் வாயிலில், கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா நோயாளி ஒருவர் இறந்துள்ளார். எந்தவொரு மருத்துவ உதவியும் கிடைக்கப் பெறாமல் தன் தந்தை இறந்துள்ளதாக, அவரின் மகள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அந்த மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் சரிவரச் செயல்படுகின்றனவா என்கிற ஆய்வில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது, நாடு முழுக்கக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

corona virus
corona virus
Pixabay

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் நகரைச் சேர்ந்தவர் 60 வயதான பவன் குப்தா. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவரை சிகிச்சைக்காக இவரின் குடும்பத்தினர் சதார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனையை அடைந்ததும் அவருக்கு சிகிச்சை கொடுக்க வேண்டி ஒவ்வொரு மருத்துவப் பிரிவுக்கும் சென்று கெஞ்சியுள்ளனர்.

ஆனால், எந்தவொரு மருத்துவரும் பவன் குப்தாவுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இவ்வளவு ஏன்? குறைந்தபட்சம் முதலுதவியைக்கூட அவர்கள் வழங்கவில்லை. தன் தந்தைக்கு சிகிச்சை தர வேண்டி அந்தக் கொரோனா நோயாளியின் மகள் கண்ணீர் மல்க எடுத்த முயற்சிகள் எதுவும் அவர் அப்பாவை காப்பாற்ற கைகொடுக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தார் மருத்துவமனையின் வாயிலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சிகிச்சைக்காகக் காத்திருந்த அந்த 60 வயது அப்பாவின் உயிர், ஒரு கட்டத்தில் பிரிந்திருக்கிறது. தன் தந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்த அந்த இளம்பெண்ணும், அவரின் குடும்பமும் இச்சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர்.

தன் அப்பாவை இழந்ததால் வெடித்துக் கதறிய அந்த மகள் மருத்துவமனை வளாகத்திலேயே, ``மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களே... மருத்துவரின் உதவி வேண்டி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இந்த மருத்துவமனையில் நாங்கள் அலைந்து திரிந்தோம். ஆனால், எந்த மருத்துவ உதவியும் கிடைக்காத நிலையில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார்.

பன்னா குப்தா
பன்னா குப்தா
Twitter Image

உங்களது ஒட்டு வங்கியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே நீங்கள் இந்த மருத்துவமனை ஆய்வுக்கு வந்துள்ளீர்கள்” என்று இறந்தவரின் மகள் அமைச்சரை குறிப்பிட்டு அழுகையுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

``தந்தையை இழந்த இந்த இளம்பெண்ணின் கண்ணீர் என்னை உலுக்கிவிட்டது. சிகிச்சை தராமல் அலைக்கழித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா இதற்கு பதில் தெரிவித்துள்ளார்.

இனி என்ன செய்து என்ன பயன்? விலை மதிப்பில்லாத அந்த உயிர் மீண்டும் திரும்பி வந்துவிடுமா என்ன?