Published:Updated:

டெல்லி: சிறைக்குள் பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கைதி... அதிர்ச்சி சம்பவம்

சிறை

டெல்லியில் கைதி ஒருவர் சிறைக்குள் பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியிலுள்ள மண்டோலி சிறையில் சுப்ரத் பிள்ளை (30 வயது) பாலியல் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திங்கட்கிழமை பிற்பகல் சிறைச்சாலை மருத்துவமனையிலுள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் மருத்துவர் ஒருவர் சிறைக்குள் சென்றிருக்கிறார். அங்கு எப்போதும்போல கைதிகளின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சுப்ரத் பிள்ளை என்ற விசாரணைக் கைதி மருத்துவமனையில் இருந்த கழிவறையில் ஒளிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண் மருத்துவரைக் கழிவறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை (Representational Image) )
பாலியல் வன்கொடுமை (Representational Image) )

இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவர் கூச்சலிட்டு கைதியைத் தள்ளிவிட்டு, வெளியே ஓடியிருக்கிறார். அவருடைய அலறல் சத்தத்தைக் கேட்ட சிறைக் காவலர்கள் ஓடி வந்து பெண் மருத்துவரைக் காப்பாற்றினர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதையடுத்து, கைதி மீண்டும் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டார். சிறைக்குள் ஒரு பெண் மருத்துவரிடம், கைதி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.