Published:Updated:

"எனது அப்பாவுக்காக எதையும் செய்வேன்!"- தந்தை லாலு பிரசாத்திற்குச் சிறுநீரக தானம் கொடுக்கும் மகள்

ரோஹினியுடன் லாலு பிரசாத்

"எனது அப்பாவுக்காக எதையும் செய்வேன்" என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் மகள் தெரிவித்துள்ளார்.

"எனது அப்பாவுக்காக எதையும் செய்வேன்!"- தந்தை லாலு பிரசாத்திற்குச் சிறுநீரக தானம் கொடுக்கும் மகள்

"எனது அப்பாவுக்காக எதையும் செய்வேன்" என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் மகள் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரோஹினியுடன் லாலு பிரசாத்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று இப்போது ஜாமீனில் இருக்கிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிக நாள்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இப்போது சிறுநீரகம் பாதித்து இருப்பதாகத் தெரிகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெளிநாட்டில் நடக்க இருக்கிறது. லாலு பிரசாத் யாதவ்விற்கு தேவையான சிறுநீரகத்தை அவரது மகள் ரோஹினி ஆச்சாரியா கொடுக்க முன் வந்திருக்கிறார். இது தொடர்பாக ரோஹினி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தைக்குச் சிறுநீரகம் தானம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

லாலு பிரசாத் யாதவ்வின் மகள் ரோஹினி
லாலு பிரசாத் யாதவ்வின் மகள் ரோஹினி

அதோடு தனது தந்தையோடு இருக்கும் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோஹினி, "எனது தந்தையும், தாயாரும் எனக்குக் கடவுள். அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். உங்களது ஆசீர்வாதம் என்னை வலுவுடையவராக மாற்றும். உங்களது அன்பு மற்றும் மரியாதை என்னை மிகவும் உணர்ச்சிகரமானவளாக மாற்றி இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காகக் குரல் கொடுத்த எனது அப்பாவுக்காக எதையாவது செய்ய முடிந்தால் அது எனது அதிர்ஷ்டம். பெற்றோருக்குச் சேவை செய்வது குழந்தைகளின் கடமை. எனது தந்தைக்கு எனது பங்களிப்பு எனது ஒரு சதைப்பகுதியைக் கொடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன். நாளை அவர் உங்களுக்காகக் குரல் கொடுப்பார்" என்று தெரிவித்திருந்தார்.

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ் யாதவ் தற்போது நிதீஷ் குமாருடன் சேர்ந்து பீகாரின் ஆட்சியில் பங்கேற்றுள்ளார். அவர் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.