Published:Updated:

பாரத ரத்னா கோரிக்கை: `உணர்வுகளை மதிக்கிறேன்... இந்தப் பிரசாரம் வேண்டாமே!’ - ரத்தன் டாடா பதில்

ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்திருக்கிறது.

பாரத ரத்னா கோரிக்கை: `உணர்வுகளை மதிக்கிறேன்... இந்தப் பிரசாரம் வேண்டாமே!’ - ரத்தன் டாடா பதில்

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்திருக்கிறது.

Published:Updated:
ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடா பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார். தனது கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்களாக இருந்தாலும், அவர்களின் குடும்பம் என்று வரும்போது உடனே முன்னின்று அவர்களுக்காக எதையும் செய்வார். அதோடு கொரோனா காலத்திலும் சரி, மற்ற பேரிடர் காலங்களிலும் சரி... ஆயிரக்கணக்கான கோடிகளை அரசுக்குக் கொடுப்பது வழக்கம். தனது, டாடா டிரஸ்ட் மூலம் பொதுமக்களுக்கு உதவிகளையும் செய்துவருகிறார்.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

அப்படிப்பட்ட ஒருவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இது தொடர்பான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசு, ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இந்தப் பிரசாரத்துக்கு ரத்தன் டாடா பதிலளித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், ``எனக்கு விருது கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பிரசாரம் செய்துவருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், தயவு செய்து இது போன்ற ஒரு பிரசாரத்தை நிறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியனாக இருப்பதற்கும், நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்குப் பங்களிப்பு செய்வதற்கும் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்ஸ்வரர்களில் ஒருவரான ரத்தன் டாடா திருமணம் செய்துகொள்ளாமல், தான் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை பொதுமக்களுக்காகவே செலவிடுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனேயில் தனது கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் உடல்நலம் இல்லாமல் இருப்பது குறித்து கேள்விப்பட்டு, தானே நேரில் சென்று நலம் விசாரித்தது குறித்த புகைப்படம் வைரலானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism