Published:Updated:

`எப்போதும் எங்களுக்காகவே இருந்தார்!'- பாட்டியின் பாசம் குறித்து நெகிழும் ரத்தன் டாடா

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

``இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, என்னையும் சகோதரனையும் கோடை விடுமுறைக்காக லண்டனுக்கு அழைத்துச்சென்றார் பாட்டி. அங்குதான் எனது கண்ணியம் சுத்தப்படுத்தப்பட்டது எனலாம்" என்கிறார் ரத்தன் டாடா.

பெரிய தொழிலதிபர்கள் பொதுத் துறையில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அரிதாகவே பேசுகிறார்கள். அவர்கள் பட்ட வலி, கஷ்டம் பற்றி யாருக்கும் அவ்வளாகத் தெரிவதில்லை. அவர்களில் முக்கியமானவர், ரத்தன் டாடா. நாட்டின் மிகப் பெரிய தொழில்நிறுவனம் டாடா. இந்த நிறுவனத்தைப் பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர், ரத்தன் நெவல் டாடா. இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது, இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும். இந்த நிலையை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும், தனது குடும்ப வாழ்க்கை குறித்தும் தற்போது பிரபலமான ‘ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்துக்கு பேசியுள்ளார் டாடா.

 ரத்தன் டாடா
ரத்தன் டாடா

1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம் சோகம் நிறைந்தது. 1940-ம் ஆண்டு, ரத்தனின் தந்தை நெவல் ஹோம் சூஜி, தாயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன், பாட்டியிடம் வளர்ந்தார். இதுதொடர்பாக, ``குழந்தைப் பருவம் எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால், நானும் எனது சகோதரனும் வயதாகும்போது, எங்கள் பெற்றோரின் விவாகரத்து காரணமாக நாங்கள் கொஞ்சம் மோசமான மற்றும் தனிப்பட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டோம். அந்த நாள்கள் இன்று போல் அமையவில்லை.

ஆனால் என் பாட்டி, எங்களை எல்லா வகையிலும் வளர்த்தார். என் அம்மா மறுமணம் செய்துகொண்ட உடனேயே, பள்ளியில் உள்ள சிறுவர்கள் எங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் சொல்லத் தொடங்கினர். ஆக்ரோஷமாக அதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். ஆனால் எங்கள் பாட்டி, எல்லா வகையிலும் கண்ணியத்தைத் தக்க வைத்துக்கொள்ள கற்றுக் கொடுத்தார். இந்த மதிப்பு, இன்று வரை என்னுடன் இருக்கிறது. அந்தச் சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்ல அந்தக் கண்ணியம் தேவையானதாக இருந்தது. இல்லையெனில், நாங்கள் எதிர்த்துப் போராடியிருப்போம்.

`ஒரு தைரியத்தில் அவருக்கே கடிதம் எழுதிவிட்டேன்!’- 27 வயதில் ரத்தன் டாடாவின் உதவியாளரான இளைஞரின் கதை

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, என்னையும் சகோதரனையும் கோடை விடுமுறைக்காக லண்டனுக்கு அழைத்துச்சென்றார் பாட்டி. அங்குதான் எனது கண்ணியம் சுத்தப்படுத்தப்பட்டது எனலாம். பாட்டி எதற்கெடுத்தாலும் ‘இதைச் சொல்லாதே’.. ‘அதைப் பற்றி பேசாமல் அமைதியாக இரு’ என்று எங்களிடம் கூறுவார். எது தவறு எது சரி என்று கூறும் அவரின் கூற்றில் ஒரு கண்ணியம் இருந்தது. அவராலேயே ‘மற்றவற்றுக்கு மேலாக கண்ணியமே' நம்மை மேம்படுத்தும் என்பதை அந்தத் தருணத்தில்தான் என் மனத்தில் பதித்துக்கொண்டேன். பாட்டி எப்போதும் எங்களுக்காகவே இருந்தார். பேசுவதற்கான தைரியமும் மென்மையாகவும் கண்ணியமாகவும் இருக்க முடியும் என்பதையும் எனக்கு கற்றுக்கொடுத்தது என் பாட்டிதான்.

 ரத்தன் டாடா
ரத்தன் டாடா

அப்போது ஓகே. ஆனால், இப்போது யாரும் சரி அல்லது தவறு என்று சொல்வது கடினம். சிறுவயதில் நான் வயலின் வாசிக்க கற்றுக்கொள்ள விரும்பினேன். என் தந்தை பியானோவை வலியுறுத்தினார். நான் அமெரிக்காவில் கல்லூரியில் படிக்க விரும்பினேன். அவர், இங்கிலாந்தை வலியுறுத்தினார். நான் ஒரு கட்டடக் கலைஞராக இருக்க விரும்பினேன். ஆனால் தந்தையோ என்னை ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், என் பாட்டியால் இது எல்லாம் நடந்தது.

`பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடு கிடையாது!’-  முன்னுதாரணமான டாடா நிறுவனம்

பாட்டி மட்டும் இல்லையென்றால், நான் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்திருக்க மாட்டேன். அவரால்தான் நான் மெக்கானிக்கல் இன்னீயரிங் பதிவு செய்திருந்தாலும், மேஜர்களை மாற்றி கட்டடக்கலை பட்டம் பெற்றேன். இதில், என் தந்தைக்கு வருத்தம்தான். அவரின் கோபத்திலும் நியாயம் இருந்தது. நான் இறுதியில் என்னால் சுயாதீனமான நபராக இருக்க முடிந்தது. கல்லூரிக்குப் பிறகு, நான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கட்டடக்கலை நிறுவனத்துக்கு வேலைக்கு வந்தேன். அங்கு, இரண்டு ஆண்டுகள் வேலை செய்தேன். அது ஒரு சிறந்த காலம். அங்கு இருந்த அழகான வானிலை எனக்கு ஏற்றவாறே இருந்தது. எனக்கென சொந்தமாக கார் இருந்தது. அப்போது நான் என் வேலையை நேசித்தேன். லாஸ் ஏஞ்சல்ஸில் தான் நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன்.

 ரத்தன் டாடா
ரத்தன் டாடா

ஆனால் அதே நேரத்தில், மீண்டும் நாட்டுக்குத் திரும்புவது என முடிவுசெய்தேன். தற்காலிகமாக இந்தியாவிலேயே தங்கலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குக் காரணம், ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் நான் பாட்டியிடமிருந்து விலகி இருந்தபோது அவரது உடல்நிலை மோசமாக இருந்ததுதான். எனவே, நான் பாட்டியைப் பார்க்க திரும்பி வந்தேன். அப்போது நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர் என்னுடன் இந்தியாவுக்கு வருவார் என்று நினைத்தேன். ஆனால், 1962 இந்தோ-சீனா யுத்தத்தின் காரணமாக பெண்ணினுடைய பெற்றோர் அவளை எங்கும் நகரக்கூட சம்மதிக்கவில்லை.

இதனால் அப்போதே எங்கள் காதல் துண்டிக்கப்பட்டது. அந்தப் பெண் அமெரிக்காவில் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்க்கை மூன்று சீரிஸாக அதில் வெளிவர இருக்கின்ற நிலையில், முதல் பாகத்தில் தனது பாட்டியுடனான பாசம் குறித்து டாடா பேசியுள்ளார். இது, நெட்டிசன்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு