Published:Updated:

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் விகிதத்தில் சாதக நிலை.. சுகாதாரத்துறை அமைச்சகம்!

கொரோனா
கொரோனா

ஏப்ரல் 19-ன் தகவல்படி கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதில் சாதக நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 25 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அவ்வைரஸ் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் விகிதம் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் இரட்டிப்பாவது 3.4 நாட்களிலிருந்து 7.5 நாட்களாக குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அத்துறையின் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ``ஏப்ரல் 19-ன் தகவல்படி கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 நாள்களுக்குள் இரட்டிப்பாகும் மாநிலங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அங்கு வெறும் 8.5 நாள்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. அதற்கடுத்தபடியாக கர்நாடகா- 9.2 நாள்கள், தெலங்கானா 9.4 நாள்கள், ஆந்திரா 10.6 நாள்கள், ஜம்மு-காஷ்மீர்- 11.5 நாள்கள், பஞ்சாப் 13.1 நாள்கள், சத்தீஸ்கர் 13.3 நாள்கள், தமிழ்நாடு 14 நாள்கள், பீகார் 16.4 நாள்கள் ஆகிய மாநிலங்கள் முறையே இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதில் 20 முதல் 30 நாள்கள் உள்ள மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் அந்தமான் 20.1 நாள்கள், ஹரியானா 21 நாள்கள், இமாசலப் பிரதேசம் 24.5 நாள்கள், சண்டிகர் 25.4 நாள்கள், அஸ்ஸாம் 25.8 நாள்கள், உத்தரகாண்ட் மற்றும் லடாக் 26.6 நாள்கள். ஒடிசா மற்றும் கேரளாவில் இரட்டிப்பாகும் நாள்கள் முறையே 39.8, 72.2 என பட்டியலில் அடுத்தபடியாக இடம் பெற்றுள்ளன.''

மேலும் அவர் கூறியதாவது, ``நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் தற்போதுவரை 14.75 சதவிகிதம் குணமடைந்துள்ளளர். கடந்த 14 நாள்களில் நாடு முழுவதும் 23 மாநிலங்களில் உள்ள சுமார் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை” என்றவர், மும்பையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அவர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கினார்.

கொரோனா
கொரோனா

நாடு முழுவதும் விவசாயத் தொழிலார்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில். இது குறித்து மத்திய விவசாய விவசாயத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரி கூறுகையில், ``இந்த ஊரடங்கு காலத்தில் நாட்டின் மொத்த தானிய உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது எஃப்.சி.ஐ.(FCI). மேலும், முகக்கவசம் மற்றும் சானிடைஸர் ஆகிவற்றை அத்தியாவசியப் பொருள்களின் சட்டத்துக்குள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார். மேலும், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் என்.ஜி.ஒ-க்கள் உணவு தானியங்களை நேரடியாக எஃ.சி.ஐ-யிடம் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு