Published:Updated:

`1947 சர்ச்சை’ : ``இதை நிரூபித்தால் பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுக்கத் தயார்..!” - நடிகை கங்கனா

``1947-ம் ஆண்டு என்ன சுதந்திரப் போர் நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது குறித்து யாருக்காவது தெரிந்திருந்து எனது கவனத்துக்குக் கொண்டு வந்தால்..." - நடிகை கங்கனா.

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக வெற்றி பெற்றபோதுதான் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றதாகவும், 1947-ம் ஆண்டு பெற்றது பிச்சை என்றும் குறிப்பிட்டிருந்தார். கங்கனாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதோடு சமீபத்தில் கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கங்கனா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

அதில், `1857-ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ், ராணி லட்சுமி பாய் போன்றவர்களின் தியாகத்துடன் முதல் ஒருங்கிணைந்த சுதந்திரப் போராட்டம் நடந்ததாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது' என்று கூறி ஒரு போட்டோ ஒன்றையும் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ``1857-ம் ஆண்டு நடந்த போராட்டம் எனக்குத் தெரியும்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

ஆனால் 1947-ம் ஆண்டு என்ன சுதந்திரப் போர் நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது குறித்து யாருக்காவது தெரிந்திருந்து, எனது கவனத்துக்குக் கொண்டுவந்தால் எனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பதோடு, நான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். முதல் சுதந்திரப் போராட்டம் குறித்து முழுமையாகத் தேடியபோது, 1857-ம் ஆண்டு நடந்ததாகத் தெரியவந்தது.

``1947-ல் இந்தியாவுக்கு கிடைத்தது சுதந்திரம் அல்ல பிச்சை!'' - சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரணாவத்!

எனவேதான் `ராணி லட்சுமி பாய்’ படத்தை எடுத்தேன். வலதுசாரியிடம் தேசியவாதம் ஓங்கியிருந்தது. ஆனால் திடீரென அது ஏன் காணாமல் போனது... பகத் சிங்கை, காந்தி ஏன் சாகவிட்டார்... நேதாஜி ஏன் கொலை செய்யப்பட்டார்... அவருக்கு காந்திஜி ஏன் ஆதரவு கொடுக்கவில்லை... வெள்ளையர்கள் ஏன் நாட்டைப் பிரித்தார்கள்? இவற்றுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். நான் தெரிவித்த கருத்துக்கான விளைவுகளை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு