Published:Updated:

கேரளாவிலேயே மிகப்பெரிய பங்களாவைக் கட்டிய தொழிலதிபர்! - துபாயில் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

தற்கொலை செய்து கொண்ட ஜாய் அரக்கல் விருது பெற்ற போது...
தற்கொலை செய்து கொண்ட ஜாய் அரக்கல் விருது பெற்ற போது...

சொந்த ஊரான மானந்தவாடியில் 45,000 சதுர அடியில் கட்டிய வீட்டில் ஒரு மாத காலம் மட்டுமே வாழ்ந்த, ஜாய் அரக்கல் தற்கொலை செய்துகொண்டது வயநாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாய் அரக்கல் துபாயில் தற்கொலை செய்து கொண்டார். வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்தவர் ஜாய் அரக்கல் . துபாயில் அக்கவுன்டன்ட்டாகப் பணிபுரிந்த இவர், இன்னோவா குரூப் நிறுவனங்களைத் தொடங்கினார். இந்தக் குழுமம் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், கப்பல் போக்குவரத்து, கட்டுமானம் போன்ற துறைகளில் தொழில் செய்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் துபாயில் தன் நிறுவனத்தில் ஜாய் அரக்கல் வேலைவாய்ப்பு வழங்கினார்.

ஜாய் அரக்கல்  வீடு
ஜாய் அரக்கல் வீடு

ஏப்ரல் 23- ந் தேதி இவர் துபாயில், பே ஏரியா பகுதியில் உள்ள கட்டடத்தின் 14- வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. தற்போது, 54 வயதான ஜாய் அரக்கலுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

`90% நோ அறிகுறி; 6 மண்டலங்கள்தான் டார்கெட்’ - சென்னையின் நிலையை விளக்கும் மாநகராட்சி ஆணையர் #Corona

தற்கொலை செய்து கொண்ட அவரின் உடலை தனிவிமானத்தில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு, சொந்த ஊரான மானந்தவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. ஜாய் அரக்கல் உடலை இந்தியா கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம் பிரத்யேக அனுமதி அளித்தது.

ஜாய் அரக்கல் சமூகப்பணிகளுக்குப் பெயர் பெற்றவர். கேரள வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்குத் தனது சொந்த நிலத்தில் 40 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். இந்தியாவிலும் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். கேரள அரசு, இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவித்துள்ளது. வயநாடு அருகேயுள்ள மானந்தவாடியில் தனது சொந்த ஊரில் 45,000 சதுர அடியில் பிரமாண்ட பங்களா ஒன்றை ஜாய் அரக்கல், கட்டியுள்ளார். கேரளாவிலியே மிகப் பெரிய வீடு இதுதான்.

ஆசை ஆசையாக கட்டிய வீட்டில் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்தார்
ஜாய் அரக்கல்லின் நண்பர்

அமீரகத்தில் 10 ஆண்டுக்காலம் செல்லுபடியாகக் கூடிய, கோல்டன் விசா பெற்ற இரண்டாவது இந்தியர் ஜாய் அரக்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக, அவருக்கு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கப்பல் வர்த்தகத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக ஜாய் அரக்கல் தற்கொலைசெய்து கொண்டுள்ளார். தன் சொந்த ஊரான மானந்தவாடியில் அவர் கட்டிய பங்களாவில், ஒரு மாதம் மட்டுமே ஜாய் அரக்கல் வாழ்ந்தாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு