Published:Updated:

24.74 சென்டிமீட்டர் மழை; சாலைகள் துண்டிப்பு! - வெள்ளத்தால் சூழப்பட்ட மூணார்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

நேற்றைய நிலவரப்படி, மூணாறில் 24.74 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வெள்ளம் சூழந்த மூணாறு
வெள்ளம் சூழந்த மூணாறு

கேரள வெள்ளம் அவ்வளவு எளிதில் யாரும் மறந்திக்க முடியாது. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரளாவின் இடுக்கி மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்தது. பலர் பலியானார்கள், பலரது உடைமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தனித்து விடப்பட்டனர்.

வெள்ளம் சூழ்ந்த மூணாறு
வெள்ளம் சூழ்ந்த மூணாறு

அப்படியான ஒருநிலை தற்போது இடுக்கி மாவட்டத்தில் நிலவி வருகிறது. மாவட்டத்துக்கு அம்மாநில அரசு ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் சுற்றுலா பகுதியான மூணார், தொடர் மழை காரணமாக வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மூணாரில் 24.74 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரியவாரை பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மாற்றுப்பாதை தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், அந்த மாற்றுப்பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரியவாரை, கன்னிமலை, நயமாக்காடு மற்றும் கோவை செல்லும் வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சாலையில் வெள்ளம்
சாலையில் வெள்ளம்

மேலும், அரசு கல்லுரிச் சாலை, நடையார் சாலை, காலனிச் சாலை, நல்ல தண்ணி எஸ்டேட் சாலை ஆகியவை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மழை தொடர்வதால், சேதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.