Published:Updated:

``நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்றார்!" - அமலாக்கப் பிரிவு தகவல்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

``நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்றார்!" - அமலாக்கப் பிரிவு தகவல்

மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

Published:Updated:
ஜாக்குலின் பெர்னாண்டஸ்

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்த வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொண்டதாக அமலாக்கப் பிரிவு ஜாக்குலின் மீது குற்றம்சாட்டி இருக்கிறது. அதோடு சுகேஷிடமிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்களை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் ஜாக்குலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றுள்ளார். இவ்வழக்கில் நிரந்தர ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி ஜாக்குலின் தாக்கல் செய்திருந்த மனு நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாக்குலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கோர்ட் உத்தரவிட்ட பிறகும் அமலாக்கப் பிரிவு இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

``நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்றார்!" - அமலாக்கப் பிரிவு தகவல்

அமலாக்கப் பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், ஜாக்குலின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்தனர். மொபைல் போனில் உள்ள டேட்டாவை அழித்து விசாரணையை தாமதப்படுத்தியதாகவும் அமலாக்கப் பிரிவு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஜாக்குலின் நாட்டை விட்டு செல்ல விரும்பினார் என்றும், ஆனால் அவர் பெயர் வெளிநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றதால் அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்றும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் முன்பு நிறுத்தி விசாரித்தபோது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாகவும் அமலாக்கப் பிரிவு தரப்பில் குறிப்பிடப்பட்டது.

ஜாக்குலின் செயல்பாடு விசாரணைக்கு உதவும் வகையில் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்... அதுவரை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டது. ஜாக்குலின் மட்டுமல்லாது நடிகை நோரா என்பவரும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருள்களை வாங்கி இருக்கிறார். இரண்டு பேரிடமும் அமலாக்கப் பிரிவு, சிபிஐ மற்றும் டெல்லி போலீஸார் பல முறை நேரில் அழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். சுகேஷ் சந்திரசேகரும் திகார் சிறையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தான். அவனும் இப்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறான்.