Published:Updated:

மதத்தைக் காரணம் காட்டி இஸ்லாமியர் டெலிவரி செய்த பொருள்களை வாங்க மறுத்தவர் கைது!

Representational Image
Representational Image

இளைஞர் காரணம் கேட்டபோது, முஸ்லிம் டெலிவரி செய்த பொருள்களை வாங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய மக்கள் குறித்து கொச்சையான கருத்துகளைக் கூறி அவரிடத்தில் சண்டையிட்டார்.

மும்பை, மீரா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரியா சுதுர்வேதி. கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாத சுப்ரியா அந்தப் பகுதியில் உள்ள மளிகை ஸ்டோரிலிருந்து பொருள்களை இன்று ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள்களை டெலிவரி செய்ய பர்கத் என்ற 32 வயது இளைஞர் சுப்ரியா வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். பொருள்களை சுப்ரியா செக் செய்து கொண்டிருக்கும்போது, அவரின் கணவர் காஞ்சன் அங்கே வந்துள்ளார். டெலிவரி செய்த இளைஞரின் பெயரைக் கேட்டுள்ளார்.

மீரா ரோடு
மீரா ரோடு

இஸ்லாமிய பெயராக இருந்ததால், உடனே தன் மனைவியிடம் பொருளை, வாங்காமல் திருப்பிக் கொடு என்று கூறியுள்ளார். இளைஞர் காரணம் கேட்டபோது, முஸ்லிம்கள் டெலிவரி செய்த பொருள்களை வாங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய மக்கள் குறித்து கொச்சையான கருத்துகளைக் கூறி டெலிவரி இளைஞரிடத்தில் சண்டையிட்டார். நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துக்கொண்ட இளைஞர் காஷ்மீரா பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ,போலீஸார் காஞ்சன் சதுர்வேதியைக் கைது செய்து, தானே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது பிற மதத்தினர் நம்பிக்கையை அவமதிப்பது, துவேசிப்பது, தீய எண்ணத்துடன் பேசுவது (IPC 295 (a) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மளிகை பொருள்
மளிகை பொருள்

பர்கத் இந்தச் சம்பவம் குறித்து கூறுகையில், ``நாடே கொரோனா காரணமாக, லாக்டௌனில் இருக்கும்போது எங்களைப் போன்றவர்கள் குடும்ப சூழல் கருதி உழைக்கிறோம். இதனால், நாங்களும் ரிஸ்க் எடுக்கிறோம்.

‘2-வது அலை மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்!’ - அதிகாரியின் எச்சரிக்கையும் ட்ரம்பின் விமர்சனமும்

எங்களது உயிரை பணயம் வைத்துதான் பொருள்களை டெலிவரி செய்கிறோம். என் குடும்பத்தினர்கூட தினமும் பயந்து வாழ்கின்றனர். எங்களின் சூழ்நிலையை பல கஸ்டமர்கள் புரிந்து கொள்கின்றனர். சதுர்வேதி போன்றவர்கள் மத துவேஷம் காட்டுகின்றனர்'' என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு