Published:Updated:

`மத உணர்வைப் புண்படுத்திவிட்டார்!’ - பிஎஸ்என்எல் பணியிலிருந்து நீக்கப்பட்ட ரெஹானா ஃபாத்திமா

ரெஹானா ஃபாத்திமா

ரெஹானா ஃபாத்திமா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், அவர் கைது செய்யப்பட்டார்.

`மத உணர்வைப் புண்படுத்திவிட்டார்!’ - பிஎஸ்என்எல் பணியிலிருந்து நீக்கப்பட்ட ரெஹானா ஃபாத்திமா

ரெஹானா ஃபாத்திமா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், அவர் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:
ரெஹானா ஃபாத்திமா

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ரெஹானா பாத்திமா, பத்திரிகையாளர் கவிதா ஜெகல் உள்ளிட்ட சில பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதால் அவர்களால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. மேலும், அந்நேரம் சபரிமலை கோயில் நடையும் அடைக்கப்பட்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு இவர்கள் ஆளானார்கள்.

ரெஹானா பாத்திமா
ரெஹானா பாத்திமா

ரெஹானா பாத்திமா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவர் பணியாற்றும் பிஎஸ்என்எல் நிறுவனமும் அவரை தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்தது. தொடர்ந்து வேறு கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டும் சபரிமலைக்கு செல்லப்போவதாகக் கூறி, கொச்சி காவல்துறை துணை ஆணையரிடம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுடன் வந்தால் மட்டுமே காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக, அவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரள மாநிலத்தின் இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பும், `ரெஹனா பாத்திமா என்ற இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்று, இந்துக்களின் உணர்வையும் அவர்களின் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களையும் புண்படுத்தியதால், இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்படுகிறார்' என அறிவிப்பை வெளியிட்டது. மேலும், மாநில அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. ரெஹானா, மரபுவழி இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய தந்தை இறந்த பின்னர் தன்னுடைய மதத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இல்லை என்றும், இதன் முன்னர் அளித்த பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், தற்போது தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிவந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்களுடைய மதத்தின் உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

சபரிமலை விவகாரத்தைத் தவிர வேறு சில விஷயங்களிலும் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். கடந்த 2018 -ம் ஆண்டு, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பெண்களின் உடலை தர்ப்பூசணியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர், இந்தப் புகைப்படத்தை முகநூல் நீக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், `கிஸ் ஆஃப் லவ்’ என்ற முத்தப் போராட்டத்தை ஆதரித்ததன் மூலமும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டார், ரெஹானா ஃபாத்திமா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism