Published:Updated:

`மகத்தான தலைவனுக்குச் செய்யும் மரியாதை அதுதான்...' - அப்துல் கலாம் நினைவுநாள் பகிர்வு!

அப்துல் கலாம் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை

'அவரது கனவுகளை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை. அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவே அமைந்தார் கலாம்.'

`மகத்தான தலைவனுக்குச் செய்யும் மரியாதை அதுதான்...' - அப்துல் கலாம் நினைவுநாள் பகிர்வு!

'அவரது கனவுகளை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை. அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவே அமைந்தார் கலாம்.'

Published:Updated:
அப்துல் கலாம் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, ஆசிரியர், விஞ்ஞானி எனப் பன்முகங்கள் கொண்ட அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவில் அக்டோபர் 15, 1931 அன்று பிறந்தார். இந்தக் குழந்தைதான் இந்தியாவின் 'ஏவுகணை மனிதன்' என்று அழைக்கப்படும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இயற்பியலிலும் விண்வெளி பொறியியலிலும் அதீத ஆர்வம் கொண்ட அப்துல் கலாம் தனது ஆராய்ச்சிகள் மூலம் உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் என்று சொன்னால் மிகையாகாது. கலாம் தனது இளங்கலை பட்டப்படிப்பை இயற்பியல் பிரிவில் திருச்சியில் உள்ள செயின்ட ஜோசப் கல்லூரியில் முடித்தார். அதன் பிறகு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) கல்லூரியில் விண்வெளி பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் தனது வாழ்நாளில் 40 ஆண்டுக்காலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலும், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிலும் கழித்தார்.

இந்தியாவில் 1988-ம் ஆண்டு நடைபெற்ற போக்ரேன் 2 அணு உலை சோதனையில் கலாமின் பங்கு அளப்பரியது. இதோடு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுகணை ராக்கெட்டான எஸ்எல்வி-3யும் இவரது தலைமையில்தான் விண்ணில் செலுத்தப்பட்டது. இது முதலில் 1979-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் வெற்றி பெறவில்லை. பின்னர் 1980-ம் ஆண்டு மீண்டும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போதுதான் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியைக் கவனிக்க ஆரம்பித்தன. இந்தியாவின் அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளின் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றினார் அப்துல் கலாம். இவர் இந்தியாவுக்காக மிகப்பெரிய கனவுகளைத் தனது வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டிருந்தார். அந்தக் கனவுகளை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்லவும் அவர் தவறவில்லை. அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவே அமைந்தார் கலாம்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர் இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பணியாற்றினார். இந்தியாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்த சமயத்தில் 'மக்களின் ஜனாதிபதி' என்றே அன்போடு அழைக்கப்பட்டார். ஒரு விஞ்ஞானி இந்தியாவின் ஜனாதிபதியானது அதுவே முதல் முறை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்களின் இந்த அதீத அன்பும் மரியாதையும் வேறு எந்த இந்திய ஜனாதிபதிக்கும் கிடைத்ததில்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் (1997), ஜனாதிபதி ஆவதற்கு முன்பே இவருக்கு வழங்கப்பட்டது. கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் தலைமை விஞ்ஞானியாகவும், ஆராய்ச்சியாளராகவும் இருந்திருந்தாலும் தனக்குப் பிடித்த பணியாக ஆசிரியர் பணியையே குறிப்பிட்டார். தனது வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை இளைய தலைமுறையினருடன் உரையாற்றுவதிலேயே கழித்தார். அதில்தான் முழுமையான திருப்தி எனப் பல முறை கூறுவார் அப்துல் கலாம். ஒரு எழுத்தாளராகப் பல சிறந்த புத்தகங்களையும் எழுதியுள்ளார் கலாம். இவரது 'இந்தியா 2020' இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். இதில் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதற்கான திட்டங்களைப்பற்றி எழுதியிருப்பார். சுயசரிதையான 'அக்னிச் சிறகுகள்' அவரது வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும். இதோடு காதல், நம்பிக்கை மற்றும் தேசப்பற்று போன்ற தலைப்புகளில் உள்ள தனது கவிதைகளையும் 'தி லைஃப் டீரீ ' என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார். அதே நேரத்தில் அதீத வாசிப்பு ஆர்வலராக இருந்த அப்துல் கலாம் எப்போதும் புத்தகங்கள் சூழவே தனது அறையில் காணப்படுவார்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

இந்தியாவின் வல்லரசு கனவுகளைத் தேசம் முழுவதும் சுமந்து திரிந்த இந்தியாவின் கனவு நாயகன் ஜூலை 27, 2015 அன்று உயிரிழந்தார். இவர் ஷில்லோங்கில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே தனது இன்னுயிரை நீத்தார். தனக்கு மிகவும் பிடித்தமான வேலையான பேராசிரியர் பணியைச் செய்துகொண்டிருக்கும்போதே மரணம் அவரை பற்றிக்கொண்டது. இவரது நினைவு மண்டபம் 2017-ம் ஆண்டு இந்திய அரசால் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பில் திறக்கப்பட்டது. இங்கு கலாம் தயாரித்த ஏவுகணைகளின் மாதிரிகள், கலாமின் வாழ்க்கை ஓவியங்கள், கலாமின் உருவச் சிலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

கலாம் மறைந்து இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகின்றன. இந்தியா 2020-ல் வல்லரசு நாடாகிவிடும் என்றே கனவு கண்டிருந்தார் அப்துல் கலாம். அதற்காகவே இளைஞர்களை எப்போதும் கனவு காணுங்கள் என ஊக்கப்படுத்தி வந்தார். இதோ கலாம் நினைத்த 2020-வும் நிறைவடையப் போகிறது. ஆனால், கலாமின் வல்லரசு கனவு இன்னும் சுடர் விட்டு எரிந்து கொண்டேதான் இருக்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் ஒற்றை கனவையே சுமந்துகொண்டு திரிந்த இந்தியாவின் கனவு நாயகனுக்கு நாம் கைமாறாகச் செய்ய வேண்டியதெல்லாம் அந்தக் கனவுகளை நனவாக்குவதே. கலாமின் கனவு நனவாக இந்தியா இன்னும் பல தூரங்களைக் கடக்க வேண்டும். ஒரு பேரிடரால் மனித குலமே உருக்குலைந்து காணப்படும் இந்த நேரத்தில் கலாமின் வல்லரசு கனவுகளை நினைவில் கொள்வோம்.

ஒரு தேசம் தனது மகத்தான தலைவனுக்குச் செய்யும் மரியாதைகளில் எல்லாம் சிறந்தது அவனது தீராக் கனவுகளைத் தானும் சுமப்பதே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism