Published:Updated:

104 மணிநேரம்; 500 மீட்புப் பணியாளர்கள் -ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் ( ட்விட்டர் )

சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன், 104 மணி போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் ராகுல் சாஹி என்ற 11 வயது சிறுவன் தனது வீட்டின் பின்புறத்திலிருந்த 80 அடி ஆழமுடைய ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவன் கிணற்றில் சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இது குறித்து மீட்புக்குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) அதிகாரிகள், ராணுவம், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் உட்பட மொத்தம் 500 பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

அந்தச் சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இதையொட்டி 104 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்தச் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். சிறுவன் மீட்கப்பட்ட பின்னர், உடனடியாக பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்
ட்விட்டர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது, ``அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக்குழுவினரின் இடைவிடாத மற்றும் அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism