Published:Updated:

`கனமழை; மார்பளவு ஓடும் வெள்ளம்!’ - கண்ணீருடன் தவித்த ரிக்‌ஷாக்காரர் #Viral

அந்த வீடியோவில் தனது ரிக்‌ஷாவைப் பிடித்துக்கொண்டு அதை விட்டு நகர அவர் கண்ணீரோடு மறுக்கிறார்.

Screenshot From Viral Video
Screenshot From Viral Video

பாட்னாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மூழ்கிய தனது ரிக்‌ஷாவை விட்டு விலக முடியாமல் நீரில் தவிக்கும் ரிக்‌ஷாக்காரர் ஒருவரின் வீடியோ பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது.

`கனமழை; மார்பளவு ஓடும் வெள்ளம்!’ - கண்ணீருடன் தவித்த ரிக்‌ஷாக்காரர் #Viral

பீகார் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பாட்னா உட்பட பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய தனது ரிக்க்ஷா வண்டியுடன் மார்பளவு ஓடும் வெள்ளநீரில் தனது ரிக்ஷாவை இறுகப் பிடித்துக்கொண்டு தவிக்கும் ரிக்க்ஷாக்காரரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் தனது ரிக்ஷாவைப் பிடித்துக்கொண்டு அதை விட்டு நகர அவர் கண்ணீரோடு மறுக்கிறார். அருகிலிருந்து வீடியோ எடுக்கும் நபர், ``அழாதீர்கள்.... ரிக்ஷாவை அங்கேயே நிறுத்தி வையுங்க. எதுவும் ஆகாது, கவலைப்பட வேண்டாம்" என்று அழுதுகொண்டிருக்கும் ரிக்ஷாக்காரருக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவை ஷேர் செய்த பலரும் ``இவருக்காக என் இதயம் கனக்கிறது. வாய்ப்பளித்தால் இவருக்குப் புதிய ரிக்ஷா வாங்கித் தருகிறேன்" எனவும், ``இந்தக் காட்சி என் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது" என மற்ற சிலரும் தங்களின் கருத்தைப் பதிவிட்டுள்ளனர்.