Published:Updated:

கேரளா: தோப்பில் கிடந்த 266 தோட்டாக்கள்... தீவிரவாத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டனவா?

கோழிக்கோட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள்

ஒரு பாக்ஸில் 50 தோட்டாக்கள் வீதம் 5 பாக்ஸ்களில் 250 தோட்டாக்களும், சிதறிக்கிடந்த 16 தோட்டாக்கள் என மொத்தம் 266 தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றினர்.

கேரளா: தோப்பில் கிடந்த 266 தோட்டாக்கள்... தீவிரவாத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டனவா?

ஒரு பாக்ஸில் 50 தோட்டாக்கள் வீதம் 5 பாக்ஸ்களில் 250 தோட்டாக்களும், சிதறிக்கிடந்த 16 தோட்டாக்கள் என மொத்தம் 266 தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றினர்.

Published:Updated:
கோழிக்கோட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள்

கேரள மாநிலம், கோழிக்கோடு, தொண்டையாடு அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய பகுதியைச் சிலர் சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஒரு தென்னை மரத்தின் பக்கத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்துள்ளன. அதைக் கண்ட தொழிலாளர்கள் ஏரியா கவுன்சிலருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அந்த கவுன்சிலர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார் அங்கு சென்று தோட்டாக்களைச் சேகரித்தனர். அங்கே, ஐந்து பாக்ஸ்களிலும், ஆங்காங்கே சிதறியும் தோட்டாக்கள் கிடந்தன. ஒரு பாக்ஸில் 50 தோட்டாக்கள் வீதம் ஐந்து பாக்ஸ்களில் 250 தோட்டாக்களும், அந்தப் பகுதியில் சிதறிக்கிடந்த 16 தோட்டாக்கள் என மொத்தம் 266 தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றினர். தீவிரவாதப் பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் அந்தத் தோட்டாக்களை புதரில் மறைவாக விட்டுச் சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

தோட்டாக்களைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை
தோட்டாக்களைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை

இது குறித்து க்யூ பிரிவு போலீஸார் உள்ளிட்டவர்கள் விசாரணை நடத்தினர். புனே, இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் 0.22 அளவுடைய பிஸ்டல்களில் பயன்படுத்தும் தோட்டாக்கள் அவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. லைசென்ஸ் பெறப்பட்ட துப்பாக்கிகள், ரைஃபிள் கிளப்களில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் இந்தத் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது பயன்படுத்தும் ஃபயரிங் டார்கெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தோட்டாக்கள்
தோட்டாக்கள்

அதேசமயம், தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் ரைஃபிள் கிளப் எதுவும் இல்லை. ரைஃபிள் கிளப்களில்கூட இவ்வளவு எண்ணிக்கையில் தோட்டாக்கள் கையிருப்பு வைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர். எனவே, தீவிரவாத கும்பல் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு, தோட்டாவை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism